மேலும் அறிய

Best Mileage Scooters: மைலேஜில் அசத்தும் ஸ்கூட்டர்கள் - லிட்டருக்கு 80 கி.மீ: லிஸ்டில் டாப் மாடல் எது?

High Mileage Scooters in India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் வழங்கக் கூடிய ஸ்கூட்டர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

High Mileage Scooters in India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் வழங்கக் கூடிய, முதன்மையான 8 ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கூட்டர்களின் மைலேஜ் விவரங்கள்:

வாகனம் வாங்குவது என முடிவு செய்தாலே, அனைவரும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான அம்சம் அதன் மைலேஜ் ஆக தான் இருக்கும். அந்த வகையில் குறைந்த எரிபொருளை உறிஞ்சும் ஸ்கூட்டர்களைத் தேர்ந்தெடுப்பது செலவை குறைப்பது மட்டுமின்றி, உரிமையாளருக்கு கணிசமான மதிப்பையும் சேர்க்கிறது. அந்த வகையில் இந்தியாவில் நல்ல மைலேஜ் வழங்கும் சிறந்த 8 ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவதோடு,  சிக்கனமான மற்றும் வசதியான சவாரிக்கு உறுதியளிக்கின்றன. 

1. ஹோண்டா டியோ

ஸ்போர்ட்டி, நடைமுறை மற்றும் மலிவு விலைக்கு பெயர்போன,  ஹோண்டா டியோவின் விலை  71 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இது லிட்டருக்கு50 கிமீ மைலேஜை வழங்குகிறது. அதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்திறனுடன், ஸ்டைல் ​​மற்றும் சேமிப்பு இரண்டையும் விரும்பும் நகர்ப்புற ரைடர்களுக்கு இது மிகவும் பிடித்தமான தேர்வாக இருக்கும்.

2. டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்:

குறைந்த செலவிலான வாகனத்தை தேடும் நகரவாசிகளுக்கு TVS Scooty Pep Plus மிகவும் சரியான தேர்வாக இருக்கும்.  சுமார் 65,000 ரூபாய் மதிப்பிலான இந்த வாகனம், லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வழங்குகிறது. அதன் இலகுரக சட்டகம் மற்றும் எரிபொருள்-திறனுள்ள இயந்திரம் நெரிசலான தெருக்களிலும் அநாயசமாக பயணிக்க வழிவகை செய்கிறது.

3. Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட்:

ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான, Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் அதன் நேர்த்தியான வடிவமைப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி,  லிட்டருக்கு 71.33 கிமீ என்ற மைலேஜையும் வழங்குகிறது. சுமார் 81,000 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், கூடுதல் பாதுகாப்பிற்காக 125 சிசி இன்ஜின் மற்றும் டிஸ்க் பிரேக்குகளுடன் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது.

4. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125:

இந்தியாவின் முதல் மேக்சி-ஸ்கூட்டராக, சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஒப்பிடமுடியாத வசதியையும் எரிபொருள் செயல்திறனையும் வழங்குகிறது, தோராயமாக லிட்டருக்கு 58.5 கிமீ மைலேஜ் வழங்குகிறது. சுமார் 96,000 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த வாகனம், ஸ்கூட்டர் பிரிவில் கேம் சேஞ்சராக உள்ளது.

5. ஹோண்டா ஆக்டிவா 125:

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக, ஹோண்டா ஆக்டிவா 125 நம்பகத்தன்மையையும் எரிபொருள் செயல்திறனையும் ஒருங்கிணைத்து, லிட்டருக்கு 60 கிமீ மைலேஜை வழங்குகிறது. இதன் தொடக்க விலை 79,000 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்கூட்டர் மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேமிப்பிற்காக ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் மற்றும் eSP தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

6. டிவிஎஸ் ஜூபிடர்:

சௌகரியம் மற்றும் சவாரி தரத்திற்கு பெயர் பெற்ற டிவிஎஸ் ஜூபிடரின் தொடக்க விலை 73,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் வழங்குவதோடு,  பல நடைமுறை அம்சங்களுடன், செயல்திறன் மற்றும் வசதிக்கு இடையே சமநிலையை தேடும் ரைடர்களுக்கு இது சரியான தேர்வாக உள்ளது.

7. Yamaha Fascino 125 Fi ஹைப்ரிட்:

ஸ்டைல் ​​மற்றும் செயல்திறன் இரண்டையும் எதிர்பார்ப்பவர்களுக்கு, Yamaha Fascino 125 Fi ஹைப்ரிட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 79,000 ரூபாய் விலையில் கிடைக்கும்,  இந்த பிரீமியம் ஸ்கூட்டர் லிட்டருக்கு 68.75 கிமீ மைலேஜை வழங்குகிறது. இது ஃபேஷன்-ஃபார்வர்டு ரைடர்களுக்கு தகுதியான முதலீடாக இருக்கும்.

8. TVS XL100:

44 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இருந்து தொடங்கும் டிவிஎஸ் எக்ஸ்எல், லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதில் உள்ள  99.7 cc இன்ஜின் நகரப் பயணங்களுக்கு போதுமான சக்தியை வழங்குகிறது. அதே நேரத்தில் அதன் இலகுரக வடிவமைப்பு போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக பயணிக்க உதவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bomb Threats: இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நோக்கி பறந்த விமானம் பாதி வழியில் தரையிறக்கம்
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நோக்கி பறந்த விமானம் பாதி வழியில் தரையிறக்கம்
Breaking News LIVE: ”அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
”அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Kane Williamson: ரசிகர்கள் ஷாக்..! டி20 & ஒடிஐ கேப்டன் பதவியிலிருந்து நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ராஜினாமா
Kane Williamson: ரசிகர்கள் ஷாக்..! டி20 & ஒடிஐ கேப்டன் பதவியிலிருந்து நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ராஜினாமா
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!Covai CCTV : பாதாள சாக்கடையில் தவறி விழுந்த இளம்பெண்! திடுக் காட்சிகள்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bomb Threats: இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நோக்கி பறந்த விமானம் பாதி வழியில் தரையிறக்கம்
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நோக்கி பறந்த விமானம் பாதி வழியில் தரையிறக்கம்
Breaking News LIVE: ”அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
”அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Kane Williamson: ரசிகர்கள் ஷாக்..! டி20 & ஒடிஐ கேப்டன் பதவியிலிருந்து நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ராஜினாமா
Kane Williamson: ரசிகர்கள் ஷாக்..! டி20 & ஒடிஐ கேப்டன் பதவியிலிருந்து நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் ராஜினாமா
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
USA vs SA T20 World Cup 2024: முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
Indian Cricket Coach: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கம்பீர் போட்ட நிபந்தனை, திடீரென சீனில் வந்த  WV ராமன்
Indian Cricket Coach: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கம்பீர் போட்ட நிபந்தனை, திடீரென சீனில் வந்த WV ராமன்
EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!
பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..
Embed widget