மேலும் அறிய

Bajaj Freedom 125 CNG: கிலோவிற்கு 102KM மைலேஜ், ஒரு ரூபாய் செலவில் 330KM ரேஞ்ச் - பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்

Bajaj Freedom 125 CNG: உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளான பஜாஜ் ஃப்ரீடம், ஒரு கிலோவிற்கு 102 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bajaj Freedom 125 CNG: உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளான பஜாஜ் ஃப்ரீடம் மாடலின் எரிபொருள் கொள்கலனை நிரப்பினால் 330 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் சிக்கனத்தில் மன்னனாக விளங்குவதோடு, உயர்ந்து வரும் பெட்ரோல் விலைகளையும் வலுவாகக் கட்டுப்படுத்தக்கூடியதாக ஒரு இருசக்கர வாகனத்தை தேடினால், இந்த பைக் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். பெட்ரோல் பைக்குகள் உங்கள் பணத்தை அதிகம் செலவழிக்க வைக்கும் அதே வேளையில், பஜாஜின் இந்த புதிய மோட்டார்சைக்கிளானது ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ஒரு ரூபாயை மட்டுமே செலவழிக்கிறது. இந்த புதிய வாகனமானது நவீன இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் பொருளாதாரத் தேவைகளைச் சரியாகப் பூர்த்திசெய்து, நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்திற்கு ஒரு திடமான பலனை உறுதி செய்கிறது.

கிலோவிற்கு 102 கிமீ மைலேஜ்

செயல்திறன் மற்றும் சிக்கனத்தைப் பொறுத்தவரை, பஜாஜ் ஃப்ரீடம் 125 ஒரு உண்மையான ஆற்றல் மையம் உள்ளது. சாலைகளில் மிகவும் நம்பகத்தன்மையான மைலேஜிற்காக பயனர்களால் கொண்டாடப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 102 கிலோமீட்டர் என்ற திடமான மைலேஜை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அதன் 2-லிட்டர், எஃகு பூசப்பட்ட பெட்ரோல் டேங்க் கூடுதல் பயண தூரத்தை உறுதிசெய்கிறது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டையும் சேர்த்து, டேங்கை முழுமையாக நிரப்பினால் 330 கிலோமீட்டர் தூரத்தை இடைநிற்றலின்றி கடக்கலாம் என கூறப்படுகிறது. வேகம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு கச்சிதமான கலவையாக உள்ள இந்த மோட்ட்சார்சைக்கிள், எரிபொருள்செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பதற்கான நல்ல தேர்வாகவும் உள்ளது. தினசரி நகர பயன்பாட்டிற்கு மெருகேற்றப்பட்டுள்ள 125சிசி இன்ஜின் ஆனது, 9.5Ps மற்றும் 9.7Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி - முக்கிய அம்சங்கள்

சிஎன்ஜி சிலிண்டரானது மிகவும் பாதுகாப்பாக சிலிண்டருக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு, மிகவும் கடினமான தாக்கத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையான சஷ்பென்சன், கையளும் அமைப்பு, நீடித்து உழைப்பதோடு, அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக நடைமுறைக்க உகந்த மாடலாக உருவெடுத்துள்ளது. அம்சங்கள் அடிப்படையில் ப்ளூடூத் வசதி கொண்ட டிஜிட்டல் கன்சோல், எல்இடி முகப்பு விளக்கு, பயணத்தின் போதே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பயன்பாடுகளுக்கு இடையே மாற்றிக்கொள்ளும் வசதி, நீளமான மற்றும் வசதியான இருக்கை வடிவமைப்பு ஆகிய அம்சங்களும் பஜாஜ் ஃப்ரீடமில் இடம்பெற்றுள்ளன. 

Bajaj Freedom 125 CNG: கிலோவிற்கு 102KM மைலேஜ், ஒரு ரூபாய் செலவில் 330KM ரேஞ்ச் - பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி விலை

இந்திய சந்தையில் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி கார் மாடலின் விலையானது, 90 ஆயிரத்து 975 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. ட்ரம், ட்ரம் எல்இடி மற்றும் டிஸ்க் எல்இடி ஆகிய வேரியண்ட்கள் அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது.

Bajaj Freedom 125 CNG: கிலோவிற்கு 102KM மைலேஜ், ஒரு ரூபாய் செலவில் 330KM ரேஞ்ச் - பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget