மேலும் அறிய

Bajaj CNG Bike: நாட்டின் முதல் சிஎன்ஜி பைக் ஜுலை 5ம் தேதி அறிமுகமாகிறது - பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bajaj CNG Bike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முதல் சிஎன்ஜி பைக்கை, பஜாஜ் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

Bajaj CNG Bike: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முதல் சிஎன்ஜி பைக்கை, வரும் ஜுலை 5ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் முதல் சிஎன்ஜி பைக் - ஜுலை 5ல் அறிமுகம்:

பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தொடர்பாக, முன்னும் பின்னுமாக பல்வேறு செய்திகள் வெளியான வந்த வண்ணம் உள்ளன. இந்த மாதமே அந்த வாகனம் அறிமுகம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், தங்களது சிஎன்ஜி பைக் ஜுலை 5ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை பஜாஜ் புரூஸர் என்று அழைக்கப்படும் சிஎன்ஜி பைக் விற்பனைக்கு வரும்போது வேறு  பெயரைப் பெறலாம். பஜாஜ் CNG பைக், CNG மற்றும் பெட்ரோல் மூலம் இயக்கப்படும் உலகின் முதல் உற்பத்தி-ஸ்பெக் மோட்டார்சைக்கிள் ஆகும். மலிவு விலை மற்றும் நடைமுறை மின்சார மோட்டார்சைக்கிள்கள் குறைவாக இருக்கும் காலத்தில் - பஜாஜ் CNG பைக் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் குறைந்த விலை மோட்டார் சைக்கிள் அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

இரட்டை எரிபொருள் வாகனம்:

பஜாஜ் முற்றிலும் புதிய பிராண்டின் கீழ் புதிய சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி புதிய பைக்கானது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியவை என கூறப்படுகிறது.  எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் இருசக்கர வாகனம், வாங்குபவர்களின் கவனம் அதிகமாக இருக்கும்,  சந்தையின் எண்ட்ரி லெவல் (125சிசி மற்றும் அதற்கும் குறைவானது) பெட்ரோல் வாகனத்துடன் ஒப்பிடும்போது பிரீமியம் விலை நிர்ணயம் செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி பைக்கின் வடிவமைப்பு:

மோட்டார் சைக்கிள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் அண்மைக் காலங்களாக இது பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான சோதனை புகைப்படங்கள் மூலம் புதிய வாகனமானது, ஆலசன் டர்ன் சிக்னல்கள், டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் சஸ்பென்ஷனுக்கான மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்ட நிலையான கம்யூட்டர் மோட்டார்சைக்கிளாக காட்சியளிக்கிறது.

மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக பல ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், நீளமான ஒற்றை-துண்டு இருக்கை,  பிரேக்கிங் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரம் ஆகியவற்றின் கலவையாகும். அதன் தோற்றத்தின் அடிப்படையில், எண்ட்ரி லெவல் பிரிவுகளுக்கான பட்ஜெட் வரம்பில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனத்தின் பெயர் என்ன?

நிறுவனம் சமீபத்தில் கிளைடர், மராத்தான், ட்ரெக்கர் மற்றும் ஃப்ரீடம் போன்ற பெயர்களுக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பங்களை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9 வரை சமர்ப்பித்தது. இந்த பெயர்களில் ஏதேனும் ஒன்று, புதிய சிஎன்ஜி பைக்கிறிகு சூட்டப்படலாம். இன்ஜின் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பஜாஜ் ஏற்கனவே உள்ள பெட்ரோல் இன்ஜினை மாற்ற அல்லது சிஎன்ஜி பயன்பாட்டிற்காக முற்றிலும் புதிய பவர்டிரெய்னை உருவாக்கலாம். செயல்திறன் விவரங்கள் வெளியீட்டு தேதிக்கு அருகில் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget