மேலும் அறிய

மக்களே… இனி ஓலா, உபர், டெலிவரியில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை- எங்கே தெரியுமா?

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் 2026 முதல் பெட்ரோல், டீசல் கேப்கள் மற்றும் டெலிவரி வாகனங்களுக்கு ஹரியானா அரசு தடை

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹரியானா மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 

இதன்படி 2026ஆம் ஆண்டு முதல் ஹரியானாவின் என்.சி.ஆர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வாங்கப்படும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாடகை கார்கள் மற்றும் வர்த்தக ரீதியான இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர டெலிவரி வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட உள்ளது.

என்ன காரணம்?

குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட ஹரியானாவின் முக்கிய நகரங்கள் என்சிஆர் பகுதியில் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின்போது டெல்லி மற்றும் இந்த என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து மனிதர்கள் சுவாசிக்க முடியாத அபாயகரமான கட்டத்தை எட்டுகிறது.

இதில் தொழிற்சாலைகளின் புகையை விட, மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையின் பங்கு மிக அதிகமாக உள்ளது. எனவே, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் கடுமையான வழிகாட்டுதல்களின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய வண்டிகளில் புரட்சிகர மாற்றம்

இந்த விதியின்படி, புதிதாக வாங்கப்படும் வாடகை கார்கள், பைக்குகள் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்களின் சரக்கு வாகனங்கள், உணவு விநியோகம் செய்யும் வாகனங்கள் என அனைத்து விதமான வணிக ரீதியான டெலிவரி வாகனங்களும் பெட்ரோல், டீசலில் இயங்கக் கூடாது. 2026-ம் ஆண்டு முதல், புதிதாக பதிவு செய்யப்படும் அனைத்து வர்த்தக வாகனங்களும் கட்டாயமாக மின்சார வாகனங்களாகவோ அல்லது சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களாகவோ மட்டுமே இருக்க வேண்டும். எனினும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.

இந்த புதிய கொள்கையின் காரணமாக, போக்குவரத்து மற்றும் விநியோகத் துறையில் இயங்கும் பெருநிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கான மாற்று ஏற்பாடுகளை தற்போதில் இருந்தே நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படும்போது, டெல்லி என்.சி.ஆர் பகுதியில் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகை மற்றும் காற்று மாசு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget