மேலும் அறிய

Kia EV9 SUV : கியா EV9 SUV மாடலின் விலை ரூ.1 கோடியா? அப்படி என்ன இருக்கு இந்த காரில்?

2024 Kia EV9 Electric SUV: கியா நிறுவனத்தின் புதிய EV9 SUV காரின் விலை, இந்திய சந்தையில் 1 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia EV9 SUV: கியா நிறுவனத்தின் புதிய EV9 SUV காரின் விலை, தொடர்பான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

Kia EV9 SUV விலை ரூ.1 கோடியா?

இந்திய சந்தையில் கிடைக்கும் மற்ற சொகுசு கார்களைப் பார்த்து, புதிய கியா எஸ்யூவியை சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வாங்க விரும்புவீர்களா? ஏனென்றால்,  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Kia  நிறுவனத்தின் புதிய EV9 காரானது மலிவானதாக இருக்காது. அதாவது புதிய எஸ்யுவி ஆனது ரூ. 65 லட்சத்திற்கும் மேலான விலையில் உள்ள EV6க்கும் அதிகமான விலைப்பட்டியலில் அமரும் என கூறப்படுகிறது.

Kia EV9 SUV வடிவமைப்பு விவரங்கள் அம்சங்கள்:

EV9 மாடல் அளவில் மிகப்பெரியதாக இருப்பதோடு,  கியா நிறுவனத்தின் முதன்மையான மின்சார சொகுசு SUV ஆகவும் உள்ளது. 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட, EV9 SUV ஆனது 3,100 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. 6 அல்லது 7 இருக்கைகள் உள்ளமைவுடன் கிடைக்கும் EV9 எடையானது,  அதன் அளவு மற்றும் பேட்டரி/மோட்டார் எடை காரணமாக 3 டன்களை நெருங்குகிறது. ஸ்டைலிங் கடினமானது மற்றும் e-GMP உடன் ஒரு பெஸ்போக் எலக்ட்ரிக் கார் பிளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Kia EV9 SUV அம்சங்கள்:

முன்புறத்தில் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகளுடன் டிஜிட்டல் பேட்டர்ன் லைட்டிங்கை கொண்டுள்ளது.  பின்புறம் எல்.ஈ.டி விளக்கு உள்ளது. உள்ளே, இரண்டாவது வரிசையில் சுழலும் இருக்கை மற்றும் இரட்டை சன்ரூஃப் உள்ளது. குறிப்பிட்ட டாப்-எண்ட் டிரிம்கள் ரிலாக்சேஷன் இருக்கைகளுடன் வருகின்றன. இரண்டாவது வரிசையில் உள்ள இந்த இருக்கைகள் மசாஜ் செய்யும் வசதியை பெற்றுள்ளன.  பேஸ் மாடல்களில் 19-இன்ச் சக்கரங்கள் இருந்தாலும், முழுமையாக மேம்படுத்தப்பட்ட டாப்-எண்ட் மாடலில் 21-இன்ச் சக்கரங்கள் கிடைக்கும் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 மீட்டர் அகலம் கொண்டுள்ள இந்த காரில், 12.3-இன்ச் தொடுதிரை, கைரேகை அங்கீகாரம் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் வரம்பு போன்ற பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது.

பேட்டரி விவரங்கள்:

இந்த வாகனத்தின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சராசரியாக 505 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்ட் பெரிய 99.8kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. அதே நேரத்தில் சிறிய வேரியண்டில் 76.1kWh பேட்டரி உள்ளது. BMW iX மற்றும் இதர சொகுசு மின்சார வாகனங்களின் பாணியில்,  EV9 SUV-யின் விலை ரூ.1 கோடி என வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​அளவு, இடவசதி மற்றும் வரம்பு ஆகியவை EV9 மாடல் பிளஸ் பாயிண்டுகளாக கருதப்படுகிறது. ஆனால் இந்திய கார் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கான மின்சார வாகன பிரிவில், அனைத்து சொகுசு பிராண்டுகளும் தங்களது மாடல்களை கொண்டிருப்பதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget