மேலும் அறிய

Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?

கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.விஷம் அருந்தி உயிரிழப்பதற்கான  கிரக காரகங்கள் என்ன என்பதை காணலாம்.  

அன்பார்ந்த வாசகர்களே  தற்போது கள்ளக்குறிச்சியில் மிகவும் சோகமான  நிகழ்வாக 55க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரே இடத்தில்  பல பேர் மரணம் அடைவது  துரதிஷ்டவசமானது. அது யாருக்கும் நடக்கக் கூடாது. ஆனால்  ஜாதக ரீதியாக  ஒரு இடத்திற்கான  பலன்களை கூட கூற முடியும்.  எடுத்துக்காட்டு  ஒரு ஊருக்கான பலனும் ஒரு நாட்டுக்கான பலனும் அல்லது இந்த உலகத்திற்கே கூட தசா புத்தி அமைப்புகள் இருக்கிறது  என்பதுதான் உண்மை. 

உலகத்திற்கு தசா புத்தி இருக்கிறது என்று நம்மால் எப்படி கூற முடியும் என்று பல பேர் கேட்கலாம்?   அதற்கான விளக்கம் என்னிடம் இருக்கிறது  முதல் உலகப்போர் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயங்களில்  செவ்வாயின் ஆதிக்கம் பூமியின் மேல் அதிகமாக இருந்த சமயம்  போர் முண்ட காலகட்டம்  கிட்டத்தட்ட  300 ஆண்டுகள்  போராளி இந்த உலகம் அழிந்தது என்று சொல்லலாம். போரால் இந்த உலகம் அழிய காரணம் என்ன  செவ்வாயின் கட்டுப்பாட்டில் உலகம் இருந்ததாக வைத்துக் கொள்வோம்.

தற்போது  ஆங்காங்கே சிறுசிறு போர்கள் நடக்கிறது. ஆனால் அவை உலக அளவில் பாதிப்பதில்லை.  இதுவே  எங்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன்பாக எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் நிச்சயமாக போர் மரணங்கள் ஆரம்பமாகி இருக்கும்.   தற்போது நடப்பது ராகுவின் தசையாக இருக்கலாம்  காரணம்  ஒரு அறுபது ஆண்டுகளாக தான் விஞ்ஞான வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி  என்பது அதிகமாக இருக்கிறது. ராகு தொழில்நுட்பத்தையும் அதன் வளர்ச்சியையும் குறிக்கும்  செவ்வாய் திசைக்கு பிறகு ராகு திசை ஆரம்பம் ஆகும் என்பது ஜோதிட உலகில் அனைவருக்கும் தெரிந்தது. 

இப்படியான சூழ்நிலையில்  செவ்வாய் திசை என்று சொல்லக்கூடிய போர் திசை முடிந்த பின்பாக  ராகு திசை அதாவது தொழில்நுட்ப திசை உலகத்திற்கு ஆரம்பமாகி இருக்கிறது  ராகு திசை முடிந்த பின்பாக குரு திசை வரும்  குரு  போதனையாளர் ஆன்மீகவாதி  வழிகாட்டி ஆசிரியர்  என்று பல வகையில் அவரை சுப கிரகமாக நாம் பார்க்கிறோம்.  ஆனால் ராகு திசை எப்போது முடிந்தது  அல்லது முடியும் என்பது யாருக்கும் தெரியாது.  ஒரு மனிதனுக்கு 120 ஆண்டுகள் தசா புத்தியை நாம் கணக்கிடுவோம். ஆனால் பூமிக்கு எத்தனை நூறு ஆண்டுகளில் தசா புத்தி மாறும் என்பது யாருக்கும் தெரியாது.  அதே போல தான் பூமிக்கு செவ்வாய் திசை  ஐயாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கலாம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக கூட இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும் அல்லது ஒரு கோடி ஆண்டுகளாக கூட இருந்திருக்கலாம் நமக்கு தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெரியும். செவ்வாய் திசைக்கு முன்பாக சந்திர திசை போய்க்கொண்டிருக்கும்  எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது சந்திர திசையில் தண்ணீர் உருவாகி இருக்க வாய்ப்புண்டு.  அதே போல் செவ்வாய் திசையில் போர்கள் மூன்று இருக்க வாய்ப்புண்டு. தற்போது செவ்வாய் திசை முடிந்து ராகு திசை ஆரம்பத்திலேயே தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியில் நாம் காணப்படுகிறோம். எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு வருவோம்.இப்படியாக உலகத்திற்கே ஜோதிடம் இருப்பது போல ஒரு ஊருக்கும் உள்ளது அப்படித்தான் தற்போது கள்ளக்குறிச்சியிலும் ஒரே ஊரைச் சேர்ந்த ஒரே பகுதியை சேர்ந்த  50-க்கும் மேற்பட்டோர் மரணித்திருக்கிறார்கள். 

விஷமருந்தி மரணிக்கும் ஜாதக அமைப்பு :

ஒருவர்  தன்னுடைய உயிரை தானே மாய்த்துக் கொள்ள வேண்டுமானால்  அதற்கு எட்டாம் பாவகம் துணையாக இருக்க வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் அவரின் ஆய்வினை குறிப்பது எட்டாம் பாவகம் மட்டுமே  ஆயுள் ஸ்தானம் எட்டாம் வீடு.   ஒருவரது உயிர் பிரிய வேண்டுமானால்  எட்டாம் இடம் கொடுக்காமல் அது நடக்கவே நடக்காது. ஒரு தண்ணீர் எப்போது விஷமாக மாறுகிறது.  தண்ணீர் என்றால் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம். வேறு கிரகங்கள் தண்ணீருக்கு வாய்ப்பு இல்லை. குருவும் ஒரு வகை தண்ணீர் தான்.

ஆனால் காற்று வெப்பமாகும் போது  அது மழையாக பொழியும்  ஆனால் அதை தண்ணீராக இல்லை காற்று தான் தண்ணீராக மாறுகிறது  எனவே குருவானவர் காற்று என்று வைத்துக் கொண்டால்  சந்திரன் தான் முழு முதல் தண்ணி. இப்படியான சூழ்நிலையில்  தண்ணீர் அதாவது கிரகமான சந்திரனுடன்  ராகு அல்லது கேது  சேர்ந்திருக்கும் பட்சத்தில் அந்தத் தண்ணீரில் ஏதோ ஒரு வேதியியல் பொருள் கலக்கப்படும் என்பது உண்மை. உதாரணத்திற்கு நாம் அனைவரும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். நோய் இருப்பவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள தானே செய்வார்கள். ஆனால் அந்த மருந்துகள் உடலில் கலந்து தச்சு பொருளாக இல்லாமல் உடலை குணப்படுத்தக்கூடிய சக்தியாக மாறுகிறது.

அவை நல்ல சக்தி  சந்திரனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்து இருக்கும் போது அவை நல்ல சக்தியாக வெளிப்படும். ஆனால் அதுவே சந்திரனுடன் ராகு கேதுக்கள் சேர்ந்திருக்கும் போது ஒரு வேலை கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால் அவ்வளவுதான். அவருக்கு மரணம் தான் நிச்சயம்.  சந்திரன் நீச்சம் அடைந்திருந்தாலும்  அல்லது  சந்திரனுடன் ராகு கேதுக்கள் சேர்ந்து இருந்தாலும் அல்லது பார்த்தாலும்  தீய கிரகங்கள் சந்திரனோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றாலும் நிச்சயமாக அவருக்கு  தண்ணீரால் பிரச்சனை உண்டு என்பது  நாம் தெரிந்து கொள்ளலாம். 

அது விஷமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை  ஒரு வேலை ஒரு பத்து பேர் கடலில் குளிக்க செல்லலாம் அந்த சமயத்தில் கடல் அலையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடையலாம் அதுவும் தண்ணீரில் கண்டம் தானே.   ஆனால் அவர் குடிக்கும் தண்ணீர் எப்படி அவருக்கு விஷமாக மாறும்  அதற்கும் தீய கிரகங்களின் பார்வை தான் காரணம்.

தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கும் சம்பவத்தில்  பதினெட்டாம் தேதி  மரணம் நிகழ்கிறது.  குறிப்பாக  காலையில்  7:00 மணிக்கு சுரேஷ் என்பவர் மரணிக்கிறார். அதன் பின்பு 8 மணிக்கு பிரவீன் என்பவர் உயிரிழக்கிறார். அதனை தொடர்ந்து தான் பல உயிரிழப்புகள் நடக்கிறது. கடந்த 18ஆம் தேதி கிரக  கோல் சாரங்களை நாம் பார்க்கும் போது  சந்திரன் துலாம் ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

செவ்வாயின் பார்வையில் இருக்கிறது சந்திரன்  செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் ஆகவே ஆகாது. செவ்வாய் கள்ளு என்று வைத்துக் கொண்டால் நகரவே நகராது. ஆனால்  சந்திரனும் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும் கல்லுக்கும் சந்திரனுக்கும் அதாவது கல்லுக்கும் தண்ணீருக்கும் எப்போதும்  ஏழாம் பொருத்தம் தான். ஆனால் அந்த கள்ள சாராயத்தை காய்ச்சுவதற்கான நாட்கள் என்று எடுத்துக்கொண்டால் சந்திரன் கேது எப்போது ஒன்றாக இணைந்து இருந்தார்களோ அந்த சமயத்தில் தான் நிச்சயமாக அந்த கள்ள சாராயத்தை தயார் செய்திருப்பார்கள்.

அப்படி பார்த்தால் 15ஆம் தேதி  ஜூன் 16ஆம் தேதி 17ஆம் தேதி வாக்கிலே கேது இருந்த கன்னியின் வீட்டில் சந்திரன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்படி பார்த்தால் சந்திரன் கேது இணைவு ஏற்பட்டு  காய்ச்சின சாராயம்  விசு சாராயமாக மாறி இருக்கிறது.  அந்த சாராயம் செவ்வாயின் பார்வையில் வரும்போது அவை உடலில் ரத்தத்தில் கலந்து விஷமாக மாறி உயிரை பறித்திருக்கிறது.  இப்படி பருகியவர்கள் அனைவரும் தானே இருந்திருக்க வேண்டும் ஏன் 50 பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

100 பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இறந்தவர்களின் ஜாதகங்களில் ஏற்கனவே இதுபோன்று சந்திரனுடன் ராகுவோ அல்லது கேதுவோ தீய கரங்களில் பார்வையோ நிச்சயமாக இருந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள்தான் இந்த விபச்சாராயத்தை அருந்தி சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அவர்கள் மாட்டி இருக்கக்கூடும் என்பது தான் ஜோதிட ரீதியான விளக்கம்.

நிச்சயமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு  நம்மளுடைய  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவி த்துக் கொள்கிறோம்.   இறந்தவர்களின் ஆன்மா நிச்சயமாக சாந்தி அடைய வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணம். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அனைவருமே குணமாகி வீடு திரும்பி அவரவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் நம் எண்ணமும் கூட அதற்காக நாம் இறைவனை பிராத்திப்போம்.  

இந்த சூழ்நிலையில் சந்திரனுடன்  ராகு கேதுக்களும் அல்லது தீய கரங்களும் சேரும் பட்சத்தில் இது போன்ற மரணங்கள் நிகழும் என்பது ஜாதக குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளலாம். வருகின்ற காலங்களில்  கள்ள சாராயத்தை ஒழிப்போம்  மனித இனத்தை காப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் நிற்போம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget