(Source: ECI/ABP News/ABP Majha)
வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா
கரூர் கோடங்கிபட்டி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா நடைபெற்றது.
கரூர் என்றாலே "கரு" உருவான ஊர் என்று பெயர். இந்த மாவட்டத்தில் எண்ணற்ற ஆன்மிக தலங்களுக்கு சிறப்பு உண்டு. அதேபோல் பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த பூமி என்று அழைக்கப்படும். ஆன்மீக மாவட்டமான கரூரில் கோடங்கிபட்டி அருகே உள்ள ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு ஆலயத்திலுள்ள மூலவர் ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரனுக்கும், ஸ்ரீ வைராக்கிய அம்மனுக்கும் வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய் ,தயிர், இளநீர், கரும்பு பால், சாத்துக்குடி சாறு, எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வர்ருக்கு, வெண்பட்டு ஆடையும், ஸ்ரீ வைராக்கிய அம்மனுக்கு செவ்வாடையும், உடுத்திய பிறகு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பின்னர் ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ வைராக்கிய அம்மனுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பால், தயிர், இளநீர், கரும்பு பால், சாத்துக்குடி சாறு, எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, சந்தனப் பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, நந்தி பகவானுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தி யுடன் மகாதீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
மாதம் தோறும் நடைபெறும் பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது தமிழகத்திலுள்ள ஆன்மீக தலங்களை தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற பிரதோஷ விழாவுக்கு பக்தர்கள் அனுமதியின்றி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத சிறப்பு நந்தி பகவான் பிரதோஷ விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
தமிழக அரசு இன்று கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பல்வேறு பிற மாவட்டங்களில் சில தளர்வுகள் நீக்கி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.