மேலும் அறிய

Thaipusam 2024: முருக பக்தர்களே.. சிம்மம் முதல் மீனம் ராசிக்காரர்களே.. செல்வம் பெருக்கும் தைப்பூச பூஜை இதோ..

Thaipusam 2024: தைப்பூச தினத்தில் சிம்மம் முதல் மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். நீங்கள் செல்வ செழிப்புடன் வாழ தைப்பூச தினத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.

சிம்ம ராசி :

சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய வியாபாரிபதி மிதுன ராசி அதனுடைய அதிபதி புதன்.  பொதுவாகவே ஞான  காரகன் ஆகிய புதன் உங்களுக்கு  பணத்தை சம்பாதிக்க கூடிய வழி வாய்ப்புகளை ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் சில சிம்ம ராசி வாசகர்கள்  நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் என் கையில் பணம் தங்கவில்லை என்று புலம்புகிறீர்கள் அல்லவா? உங்களுக்கானு பரிகாரம் இதோ.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்களே.  தைப்பூச தினத்தன்று ஒரு  சத்தியத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் உங்களுடைய மனதை கஷ்டப்படுத்துகிற அளவிற்கு யார் என்ன பேசினாலும், நீங்கள் கோபப்படாமல் அமைதியாக சிரித்துக் கொண்டே செல்லுங்கள்.  இதற்கான பரிகாரம் பூஜை அறையில் அல்ல உங்களுடைய மன அறையில்தான் உள்ளது. 

பெருமாளின் அம்சம் பொருந்திய மிதுன ராசியில் புதன் பகவானின் ஆட்சி  நடக்கிறது.  அது ஆட்சியை உங்களுடைய மனதிலும் சிரிப்பழையாய் நடந்தால் நீங்கள் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆவீர்கள்.  எப்படி சிரிப்பது என்று என்னை கேட்க வேண்டாம்.  உங்களுக்கே தெரியும் உங்கள் மனதை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று. புதன்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு பூஜை அறைக்கு சென்று மனதை அமைதிப்படுத்தி அரை மணி நேரம் அல்லது முடியவில்லை என்றாலும், ஒரு பத்து நிமிடமாவது மனதை அமைதிப்படுத்தி தியான நிலைக்கு செல்லுங்கள்.  இப்படி நீங்கள் ஒன்பது வாரங்கள் தொடர்ந்து புதன்கிழமை தூறும் இரவு 8 மணிக்கு பூஜை அறையிலோ அல்லது உங்களுடைய வீட்டின் எந்த அமைதியான பகுதியிலும்  நீங்கள் பத்து நிமிடத்திற்கு தியானம் மேற்கொண்டால்  எல்லா வளங்களும் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி :

கன்னி ராசி வாசகர்களே  உங்களுடைய வியாபாரிபதி கடக ராசியின் அதிபதி சந்திர பகவான்.  தைப்பூச தினத்தன்று நீங்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானத்தை வழங்குங்கள். இயலாதவருக்கு உணவு மட்டுமே வழங்க வேண்டும்.  என்னால் சாப்பாடு வாங்கி கொடுக்க முடியவில்லை நான் பணத்தை கொடுக்கலாமா என்று கேட்கும் வாசகர்களுக்கு  என்னுடைய பதில் நிச்சயமாக இல்லை.

நீங்கள் உணவு மட்டும்தான் வழங்க வேண்டும்.  சந்திரன் ஆட்சி பெறக்கூடிய கடக ராசியை நீங்கள் இயக்க வேண்டுமானால்  தினம் தோறும் நீங்கள் உணவு அடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை உங்களால் முடிந்த தினத்தில் முடிந்தவற்றை வழங்கினாலே போதும்.  தைப்பூச தினத்திலிருந்து உங்களுடைய அன்னதானத்தை ஆரம்பியுங்கள்  நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.

துலாம் ராசி :

துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய லாபாதிபதி சூரிய பகவான் சிம்ம ராசி ஆக வருகிறது.  சூரியனுடைய உணவுப் பொருளான கோதுமை, அதில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எதுவாகினும் நீங்கள் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை இரவு வேளையில் உண்டு வந்தால், உங்களுக்கு சூரியனின் அம்சம் பொருந்திய காரியங்கள் வந்து சேரும். தைப்பூச தினத்தன்று காலையில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து சூரிய பகவானை நோக்கி  உங்களுடைய வீட்டின் மாடியில் தியானம் இருங்கள்.  ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரைக்கும்  நீங்கள் சூரிய பகவான் உங்களுடைய உடல் மீது படுகின்றது போல நீங்கள் தியானத்தில் இருந்தால் யோகம் உங்களைத் தேடி வரும்.  தைப்பூச தினத்தன்று சூரியனை நோக்கி நீங்கள் தியானத்தில் இருந்தால் பணம் உங்களை நோக்கி வரும் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.

விருச்சக ராசி :

விருச்சிக ராசி வாசகர்களே  உங்களுடைய லாபாதிபதி கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான்  உங்களுக்கு இயல்பாகவே  வியாபாரம் வியாபாரம் நுணுக்கம் அடுத்தவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும்? எப்படி ஒரு காரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று  மனதில் யோசித்து அதன்படி செயல்படுவீர்கள்.  இந்த தைப்பூச தினத்தன்று விருச்சக ராசிக்காரர்கள்  பச்சை வண்ண துண்டுகளை  பூஜை அறையில் வைத்து  உங்களுக்கு மனதிற்குப் பிடித்த தெய்வங்களை வணங்கி வர வேண்டும்.   அதுமட்டுமில்லாமல்  தெய்வங்களில் பெருமாள் வழிபாடு மிகமிகச் சிறந்தது.  குறிப்பாக தைப்பூச தினத்திலிருந்து அடுத்து வரக்கூடிய ஒன்பது வாரங்களுக்கு பெருமாளுக்கு  உங்களுடைய பூஜை அறையிலேயே மனதில் தியானத்தில் ஈடுபட்டால் நீங்கள் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆவீர்கள்.

தனுசு ராசி :

அன்பான தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய லாபாதிபதி துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான்.  வாசனை திரவியங்கள்  வீட்டை சுற்றி  சாம்பிராணி வாசனைகள் போன்றவைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  நீங்கள் இருக்கும் இடத்திலோ அல்லது நீங்கள் வசிக்கும் வீட்டிலோ வாசனையினால் நிரப்பப்பட்டு இருந்தால் அதுவே உங்களுக்கு பணத்தை கொண்டு வரும்.  தனுசு ராசி பொருத்தவரை பணத்தை வசீகரிக்க கூடிய சக்தி வாசனை பொருட்களுக்கோ, அலங்கார ஆடம்பர பொருட்களுக்கோ நிச்சயமாக உண்டு.

வருகின்ற தைப்பூசத் தினத்தன்று நீங்கள் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக ஒரு பத்து நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். அதேபோல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு எட்டு மணிக்கு பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக 10 நிமிடம் தியானத்தில் செலவு செய்தால் நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.  இப்படி நீங்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர வேண்டும்.

மகர ராசி :

மகர ராசி வாசகர்களே உங்களுடைய லாபாதிபதி விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான்  உழைக்கும் வீட்டிற்கு சொந்தக்காரரான நீங்கள். தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை மனம் உருகி கந்த சஷ்டி கவசம் பாடி அவருடைய மனதை குளிர்விப்பதன் மூலமாக, உங்களுக்கு பணவரவு உண்டாகும். 

தைப்பூச தினத்தன்று அரை நாள் மட்டும் விரதம் இருந்து முருகனை நோக்கி 10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடுங்கள் இதே போல ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இரவு 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் ஏதேனும் ஒரு பத்து நிமிடத்தை தேர்ந்தெடுத்து அந்த  மணித்துளிகளில் முருகப்பெருமானை நோக்கி நீங்கள் தியானமும் தவமும் செய்தால் நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரராகிர்கள்.

கும்ப ராசி :

கும்ப ராசி வாசகர்களே   உங்களுடைய லாபாதிபதி தனுசு ராசியின் அதிபதி குரு பகவான்.   மஞ்சள் துணியில் பூசு மஞ்சள் மூன்றை வைத்து பூஜை அறையில்  தைப்பூச தன்று குரு பகவானே நினைத்து பத்து நிமிடத்தில் தியானத்தில் ஈடுபட்டால் பணவரவை நீங்கள்  ஏற்படுத்தலாம்.  மஞ்சள் துணியில் மூன்று மஞ்சளை எடுத்து வைத்து அதை பூஜை அறையில் வைத்து குருபகவான் படத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் ஏதேனும் ஒரு பத்து நிமிடத்தில் பகவானே நோக்கி நீங்கள் கடுமையான தியானத்தில் இருந்தால் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆகலாம்.

மீன ராசி :

மீன ராசி வாசகர்களே உங்களுடைய லாபாதிபதி மகர ராசியின் அதிபதி சனி பகவான்.  கருப்பு துணியில் மூன்று மஞ்சள்களை எடுத்துக்கொண்டு, அதை  கருப்பு துணியில் வைத்து கட்டி அதை உங்கள் வீட்டில் உள்ள  சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து,  தைப்பூச தினத்தன்று ஏதேனும்  ஒரு பத்து நிமிடத்தை தியானத்தில் செலவு செய்ய வேண்டும்.   அதேபோல்  ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை கருப்பு துணியில் மூன்று பூசு மஞ்சள்களை வைத்து பூஜை அறையில் அதை சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து நீங்கள் அதற்கு முன்பாக அமர்ந்து  பத்து நிமிடத்திற்கு சதா  உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வணங்கி வர  நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trisha Political Entry | ”CM ஆகி காட்டுகிறேன் ”தவெக-வில் இணையும் த்ரிஷா? வைரலாகும் வீடியோ! | VijayStalin In Arittapatti | ”4 வருஷம் ஆயிடுச்சு முதல்வரே தேர்தல் வாக்குறுதி என்னாச்சு” பாட்டு பாடி ஆசிரியர் கேள்விAnnamalai |  சென்னை வரும் கிஷன் ரெட்டி! அண்ணாமலைக்கு டிக்? அப்செட்டில் சீனியர்ஸ் | BJP | TNSalem TVK: DMK, ADMK - வுக்கு டஃப் கொடுத்த TVK! மாஸ் காட்டிய சேலம் மா.செ! சம்பவம் செய்த தொண்டர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
Budget 2025 Expectations: வாகனங்களின் விலை குறையுமா? EV சந்தை? ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட் 2025-26
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு சிக்கல்! இன்று அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்! எங்கு? என்னவெல்லாம் பிரச்சினை?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
Budget 2025: பழைய வரிமுறைக்கு டாடாவா..! பட்ஜெட்டில் விலக்குகளுடன் அப்டேட் ஆகும் புதிய வரி முறை? மக்களுக்கு என்ன பலன்?
TN Govt Funds Transport Dept: போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்... ஒரு வழியாக நிதி ஒதுக்கிய அரசு...
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்... ஒரு வழியாக நிதி ஒதுக்கிய அரசு...
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: ”என் கவலையே..” அதிமுகவிற்கு ஒரு குத்து, பாஜகவிற்கு ஒரு குத்து - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget