மேலும் அறிய

Thaipusam 2024: தைப்பூச விழா.. முருகனின் அருளைப்பெற எந்த ராசியினர், என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் முருகனுக்கு உகந்த பண்டிகையாக கருத்தப்படும் தைப்பூசம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் எந்தெந்த ராசியினர்  என்ன செய்ய வேண்டும் ? என்பது பற்றி காணலாம். 

தமிழ்நாட்டில் முருகனுக்கு உகந்த பண்டிகையாக கருத்தப்படும் தைப்பூசம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் எந்தெந்த ராசியினர்  என்ன செய்ய வேண்டும் ? என்பது பற்றி காணலாம். 

மேஷ ராசி

எனது அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, ”தைப்பூச தினத்தில் முடிந்தவரை முருகப்பெருமானுக்கு  ஆறு விளக்குகள் ஏற்றுங்கள்.  ஆறு கிருத்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் கிருத்திகை நட்சத்திரத்தின்  அம்சம் கொண்டதாக இருக்கிறபடியால்  நீங்கள் ஆறு விளக்குகளை தைப்பூசத்தில் ஏற்றும் பொழுது  முருகனே நேரடியாக உங்க வீட்டில் அவதரிப்பார்”.

ரிஷப ராசி

எனது அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,  “உங்களுடைய  ராசியின் படி தைப்பூச தினத்தில்  கந்த சஷ்டி கவசத்தை மனம் உருகி படியுங்கள்  வீட்டில் நடைபெற்று முடிந்த  அல்லது நடக்கப் போகும் எந்த அசுப  காரியங்களும் உங்களை அணுகாமல்  அப்பன் முருகன் பார்த்துக் கொள்வார்”.

மிதுன ராசி

எனது அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே,  ”உங்களுடைய ராசிக்கு ஒரு நோட்டு புத்தகத்தில்  40 முறை தலா எட்டு எட்டு முறையாக முருகப்பெருமானின் நாமத்தை  எழுத வேண்டும்.  இவ்வாறு 40 முறை முருகப்பெருமானின் ஏதாவது ஒரு நாமத்தை நோட்டு புத்தகத்தில் பேனாவில் எழுதி வர  தைப்பூச தினத்தில் முருகனுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் கஷ்டங்கள் ஆளும் நிம்மதி உண்டாகும் நினைத்த காரியம் நடைபெறும்.

கடக ராசி

எனது அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசியிலேயே பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திர பகவான்  உங்களை ஏற்கனவே பரிபூரணமாக ஆசீர்வதித்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இருப்பினும் தைப்பூச தினத்தில் நீங்கள் யாருக்கேனும் அன்னதானம் செய்யுங்கள்.  முடியாதவர்கள் காக்கைக்கு உணவு வைக்கலாம்.  அதுவும் முடியாதவர்கள் தெருவில் இருக்கும் நாய்க்கு கூட நீங்கள் உணவு அளிக்கலாம்  தைப்பூசத்தில் நீங்கள் உணவு வழங்கும் பொழுது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் முருகப்பெருமான் முற்றுப்புள்ளி வைப்பார்.  குப்பையில் இருந்து மனிதர்களை கோபுரத்தில் உயர்த்தும் தைப்பூசம் உங்களையும் உயர்த்தும்.

சிம்ம ராசி

எனது அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, “தைப்பூச தினத்தன்று பூஜை அறையில் 10 நிமிடம் அமர்ந்து முருகப்பெருமானை நோக்கி தியானம் செய்யுங்கள்.  அமைதியான சூழலில் நீங்கள் முருகப்பெருமானை ஒற்றை சிந்தனையோடு நோக்கி பார்க்கும் பொழுது  அவர் உங்களுக்கு  செய்ய வேண்டிய அனைத்து சுப காரியங்களையும் சிறப்பாக செய்து கொடுப்பார்.  சிம்ம ராசி வாசகர்களே தைப்பூசத்தில் தியானத்தை மறந்து விடாதீர்கள்”. 

கன்னி ராசி

எனது அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, ”நாளுக்கு நாள் பெருகி வரும் இயந்திர உலகில்  உங்களைப் போன்ற புத்திசாலிகள்  அடுத்தடுத்தகட்ட பரிமாண வளர்ச்சிக்கு சென்று கொண்டே இருப்பார்கள்.  ஆனால் ஒரு சிலருக்கு வாழ்க்கையில் தடைகள் தாமதங்கள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த தைப்பூச தினத்தில்  108 முறை  முருகப்பெருமானின் நாமங்களை போற்றி எழுத வேண்டும் 

உதாரணத்திற்கு, 

  1.   ஓம் கந்தா போற்றி
  2.  ஓம் கதிர்வேலனே போற்றி
  3.  ஓம் வடிவேலனே போற்றி
  4.  ஓம் ஆறுமுகனே போற்றி
  5.  ஓம் கடம்பனை போற்றி
  6.  ஓம் கார்த்திகேயனே போற்றி

 இப்படியாக முருகப்பெருமானின் நாமங்களை 108 முறை போற்றி எழுதி வர  அந்த நொடியே முருகனின் பரிபூரண அருளை பெற்று வாழ்க்கையில்  நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து  சுலபமாக விடுபடலாம்.

துலாம் ராசி 

எனது அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, “தைப்பூச தினத்தில் நீங்கள் முருகப்பெருமானுக்கு  மண் விளக்கேற்றும்  பயபக்தியுடன்  அவரிடம் மனம் உருகி பிரார்த்திக்கும் போது உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும்  நிறைவேறும்.  ஒரு விளக்கு மூன்று விளக்கு ஆறு விளக்கு  இதில் நீங்கள் எதை கேட்டாலும் உங்களுக்கு பலன் கிட்டும்.  வாழ்க்கையில் சறுக்கல்கள் இருந்தால்  சரியாகும்”.

விருச்சிக ராசி

எனது அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, ”உங்களுடைய ராசிக்கு நீங்கள் தைப்பூச தினத்தில்  முருகப்பெருமானின் நாமங்களை தியானம் செய்தாலே போதும்.  முருகப்பெருமானின் நாமங்களை பயபக்தியுடன்  பூஜை அறையில்  மனதிற்குள்ளே தியானம் செய்து வந்தால்  கஷ்டங்கள் அவளும் நன்மை பிறக்கும்”.

தனுசு ராசி

எனது அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே,  “உங்களுடைய ராசிக்கு  நீங்கள் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை பாடி  அவருடைய மனதை குளிர்வித்தீர்கள் என்றால்  மலையளவு இருந்த கடன்கள் கடுகளவு  குறைந்து போகும்.  வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி போகும்.  நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்”.

மகர ராசி

எனது அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, ”உங்களுடைய ராசிக்கு முருகப்பெருமானின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி வைத்து பத்து நிமிடத்தில் தியானத்தில் ஈடுபட்டால் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் முருகன்.  உங்கள் ராசிக்கு நேர் எதிர் ஏழாவது ராசியில் பூச நட்சத்திரத்தில்  சந்திரன் பிரயாணம் செய்யும் பொழுது சூரியன் உங்கள் ராசியிலேயே பிரயாணம் செய்வார்.  பௌர்ணமி யோகம் உங்கள் ராசிக்கு உண்டு.

கும்ப ராசி

எனது அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள்  48 முறை  முருகப்பெருமானின் போற்றிகளை எழுதி வர  உங்களுடைய பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பெருகும்.  பல நாட்கள் பிரச்சனையினால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு சரியான உறக்கம் உண்டாகும்.  தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கி வர சங்கடங்கள் விலகும்.

மீன ராசி

எனது அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, ”தைப்பூச தினத்தில் முருகப்பெருமானின்  படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து வழிபட்டால்.  வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.  அல்லது  முருகப்பெருமானின் போற்றிகளை 108 முறை வீட்டில் எழுதி  அதை மனம் உருகி பிரார்த்தித்து முருகனுக்கு சமர்ப்பிக்கலாம். சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.  பகைவரை வென்ற முருகனின்  பாசத்திற்குரிய பக்தராக நீங்கள் மாறுவீர்கள்.  உங்கள் தலைவரை முருகன் பார்த்துக் கொள்வார்.

இந்த நன்னாளில் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget