மேலும் அறிய

Rishabam: ரிஷப ராசிக்கு அமோகம்! 5 கிரகப் பெயர்ச்சியால் பிறக்கப்போகுது பொற்காலம்!

இந்த டிசம்பம்ர் மாதத்தில் நிகழப் போகும் 5 கிரகங்களின் பெயர்ச்சி ரிஷப ராசியினர் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்கு  டிசம்பர் மாதத்தில் பெயர்ச்சியாகின்ற ஐந்து கிரகங்கள் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப் போகிறது என்றால்,  உங்களுடைய ராசிக்கு புதன் இரண்டுக்கும், ஐந்துக்கும் அதிபதி டிசம்பர் 13ஆம் தேதி  உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் ஆன தனுசு ராசிக்குள் நுழைகிறார்.  தனுசு ராசி எந்த கிரகமும் நீச்சம் பெறாத ஒரு ராசி.  ரிஷப ராசிக்கு அஷ்டம ஸ்தானம் ஆயிற்று புதன் அந்த வீட்டில் பிரவேசிப்பதால்  ஏதேனும் சிக்கல்களைக் கொண்டு வருவாரோ? என்ற பயத்தில் நீங்கள் இருக்கலாம்.

ஆனால் தனுசு ராசி அப்பழுக்கற்ற ராசி. அந்த ராசியில் நுழையும் எந்த கிரகமும் யாருக்கும் எந்த தீங்குகளையும் விளைவிக்காது. எனவே இரண்டுக்கும் ஐந்துக்கும் உரியவர் எட்டாம் இடத்தில் பிரவேசிக்கும் போது எதிர்பாராத தன வரவு நிச்சயமாக உண்டு.  பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். ரிஷப ராசிக்கு வழக்கு வெற்றியை கொடுக்கும்.  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள்.  புதன் உங்களுக்கு நன்மையை அள்ளி வழங்குவார்.  டிசம்பர் 13ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையும் புதன் பகவான், மீண்டும் டிசம்பர் 28ஆம் தேதி வக்ரகதியில் விருச்சக ராசிக்குள் நுழைகிறார் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் புதன் வக்கிரம் பெறுவதால் தடைபட்ட தாமதமான திருமணங்கள் கைக்கூடும்.

சூரியன் பெயர்ச்சி :

சூரியன் டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார் மீண்டும் எட்டாம் இடத்தில் மற்றொரு ஒளி கிரகம்  சூரியன் ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதி எட்டாம் வீட்டில் பிரவேசிப்பதால் வீடு, மனை போன்றவை விற்று அதை பணமாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். நீண்ட நாட்களாக ஒரு வீட்டை விற்க வேண்டும் அல்லது ஒரு மனையினை விற்க வேண்டும் என்று காத்திருக்கும் உங்களுக்கு  டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு ஒரு நல்ல காலமாக இருப்பதால் அந்த சமயத்தில் உங்கள் மனைகளை அல்லது வீடுகளை நீங்கள் விற்கலாம்.  வாகனத்தில் செல்லும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டியது நல்லது  மற்றபடி எட்டாம் இடத்தில் இருக்கும் சூரியனால் எதிர்பாராத தன வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி  வேறு இடங்களுக்கு சென்று வருதல் வெளிநாடு  சென்று வேலை செய்வதற்கான ஏற்றமான காலகட்டமாக இது இருக்கிறது.

சுக்கிரன் பெயர்ச்சி :

ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன்  டிசம்பர் 25ஆம் தேதி  விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.  ராசி அதிபதி ஏழாம் வீட்டில் விட்டு இருப்பதால்  திருமண காரியங்கள் கைகூடும் நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும் பகைவராக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.  ஆரம்பித்து அதிபதியும் சுக்கிரன் ஆகி அவர் ஏழாம் இடத்தில் பிரவேசிப்பதால்  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  வாழ்க்கை துணைக்கு சிறு நோய்கள் போன்று வந்து அது மருத்துவ செலவில் மூலமாக குணமடையும்.  காசியாதிபதி ஏழாம் வீட்டில் பிரவேசிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியம் கூடும்.  வேலையில் உயர் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.

மூல நட்சத்திரத்தில் செவ்வாய் :

ரிஷப ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய கேது பகவானின் சாறத்தில் செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் நிச்சயமாக பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் எழலாம்.  தாயார் வழி உறவினர்கள் மூலம்  ஏதேனும் சிக்கல்கள் வந்தால் அதை பெரிது படுத்தாமல் அப்படியே கடந்து செல்வது நல்லது.  சேது வீட்டிற்கும் ஐந்தாம் பாவகத்தின்  மற்றொரு காரகத்துவமான பிள்ளைகள் வழியில்  சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு  அதையும் விநாயகர் வழிபாடு மூலமாக  வீரியத்தை குறைத்து நல்ல எதிர்காலத்தை பெறலாம்.

பூராடம்  நட்சத்திரத்தில் செவ்வாய் :

ரிஷப ராசியின் ராசி அதிபதி பூராட நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் அது சுக்கிரனின் நட்சத்திரமாகி உங்களுக்கு எட்டாம் பாவத்தில் மறைந்து இருந்தாலும் மேன்மையான பலன்களை கொடுக்கும்.  சொந்த ஊரில் வசிப்பவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  வேலையில் இருந்து வந்த மந்தமான சூழ்நிலை மாறும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.  சுக்கிரனும் ஏழாம் வீட்டில் பிரவேசிப்பதால் பூராட நட்சத்திரம் ரிஷப ராசியின் பார்வையிலேயே உள்ளது.  எனவே அனைத்தும் ஏற்றமான காலகட்டமாக அமைந்து விடும்.

உத்திராட நட்சத்திரத்தில்  செவ்வாய் :

ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியான  சூரியனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அஷ்டமத்தில் பயணம் செய்யும்பொழுது.  வீடு நிலம் தொடர்பான சில சிக்கல்களை சந்தித்தாலும்.  சுகாதிபதி வீற்றிருக்கக்கூடிய தனுசு ராசியின் அதிபதி  குருபகவான் சூரியனுக்கு நண்பர் என்பதால் அப்படி ஒன்றும் பெரிய இழப்பை ஏற்படுத்த மாட்டார்.

புதன் மீண்டும் விருச்சகத்தில் :

டிசம்பர் 28ஆம் தேதி புதன் வக்ரகதியில் விருச்சக ராசிக்குள் நுழைகிறார்.  அற்புதமான காலகட்டமாக இருக்கப் போகிறது.  ரிஷப ராசிக்கு இரண்டுக்கும் ஐந்துக்கும் அதிபதி ஏழாம் வீட்டில் வக்ரகிரியில் நுழைவதால் தடை பட்ட திருமணங்கள் விரைவில் முடியும்.  சண்டை போட்டு பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூடுவீர்கள். வம்பு வழக்கு கோர்ட் கேஸ் சாதகமாக முடியும்.  நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்வீர்கள்.  நண்பர்கள் மூலமாக பண விஷயத்தில் ஆதாயம் உண்டு.  வருகின்ற டிசம்பர் மாதத்தில் 5 கிரக பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எந்த விதமான கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள்.  வாழ்த்துக்கள் வணக்கம் !!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget