மேலும் அறிய

Rasi Palan | மேஷத்திற்கு செலவு.. விருச்சிகத்திற்கு ஏற்றம்… இன்றைய உங்களின் ராசிக்கான பலன்கள் இவைதான்..

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல நாளாக அமைகிறது.இந்நாளில் முக்கிய நேரங்கள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்...

இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நன்மை இருக்கும் என்பது வரை, இன்றைய நாளுக்கான ராசி பலன் மற்றும் இந்நாளில் முக்கிய நேரங்கள் பற்றிய தொகுப்பு இதோ..

  • Rasi Palan | மேஷத்திற்கு செலவு.. விருச்சிகத்திற்கு ஏற்றம்… இன்றைய உங்களின் ராசிக்கான பலன்கள் இவைதான்..

நல்ல நேரம்:

காலை- 7:30 மணி முதல் 08:30 மணி வரை

மாலை- 3:30 மணி முதல் 4:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை

மாலை – 01.30 மணி முதல் 2:30 மணி வரை

ராகுகாலம்: 

மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை:

மாலை 3 மணி முதல்  4:30 மணி வரை

எம கண்டம்:

மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை

சூலம், பரிகாரம்:

மேற்கு, வெல்லம்

சந்திராஷ்டமம்:

கேட்டை

இன்றைய ராசிப்பலன்கள்:

மேஷம்:

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்துக்கொள்ளவும், எதிர்ப்பார்த்து காத்திருந்த வெளியூர் தொடர்பானப் பயண வாய்ப்புகள் கைக்கூடும் நாள் இன்று. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இதோடு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். மேலும் மேஷ ராசிக்காரர்களுக்கு விரயம் நிறைந்த நாள் இன்று.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். மேலும் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உங்களுக்கு உண்டாகும். தனவரவின் மூலம் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இதோடு விலையுயர்ந்த பொருள்களின் மீதான ஆர்வம் மேம்படும்.

மிதுனம்:

கணவன்,மனைவிக்கிடையே அனுசரித்து நடந்துக்கொள்ளவும். வியாபாரங்களில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றிக் கொள்ளும் நாள் இன்று. இருந்தப்போதும் சமூகம் தொடர்பானப் பணிகளில் சிந்தித்து செயல்படவும், உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும்.

கடகம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேலும் வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் உங்களுக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாளாக கடக ராசிக்காரர்களுக்கு அமையும்.

சிம்மம்:

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மேலும் உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். மேலும் இந்த நாள் உங்களுக்கு அமைதி நிறைந்த நாளாக அமையும்.

கன்னி:

வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். மேலும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள்களாக தள்ளிப்போனக் காரியங்கள் நிறைவுப் பெறும். வீடு, வாகனத்தை மனதிற்குப் பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அனுகூலமான நாளாகவும் உங்களுக்கு அமையும்.

துலாம்:

வியாபார பணிகளில் ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நீண்ட நாள் பிராத்தனைகளை நிறைவேற்றும் நாளாக அமையும்.

விருச்சிகம்:

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

தனுசு:

புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்:

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தவறிப்போன சில பொருள்கள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

கும்பம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேச்சு வன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை  உருவாக்கக்கூடும். உடல்  தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து  செல்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

மீனம்:

வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிற மொழி பேசும் நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Embed widget