![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thulam Rasi Palan: துலாம் ராசி அன்பர்களே...தொடர் வெற்றிகள்; போராடி வெல்வீர் -உங்களுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் இதோ!
Thulam Rasi Palan Tamil New Year 2023: துலாம் ராசி நேயர்களுக்கு பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்த பலன்களை கீழே விரிவாக காணலாம்.
![Thulam Rasi Palan: துலாம் ராசி அன்பர்களே...தொடர் வெற்றிகள்; போராடி வெல்வீர் -உங்களுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் இதோ! Tamil New Year 2023 Rasi Palan Thulam Rasi Tamil Puthandu Palan April 14 Thulam Zodiac Sign Horoscope Prediction Thulam Rasi Palan: துலாம் ராசி அன்பர்களே...தொடர் வெற்றிகள்; போராடி வெல்வீர் -உங்களுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/7455228aa1bf00e70aa5f9f79f800b521681315579900333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் மாதத்தின் முதல் மாதம் சித்திரை. நாளை மறுநாள்( 14-ஆம் தேதி) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது.
அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. சோபகிருந்து புத்தாண்டில் ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார்.
துலாம் ராசிக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
துலாம் ராசி அன்பர்களே..!
சோபகிருது ஆண்டில் தனுசு ராசி அல்லது துலாம் லக்னம் சார்ந்த நபர்களே,இந்த காலகட்டங்கள் மிகவும் முக்கியமானது எனலாம்.
7-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய குரு-ராகு சஞ்சாரம் செவ்வாய் வீட்டில் இருப்பதால் வாழ்க்கை துணையின் வளம் கிடைக்கும். இரண்டாம் குழந்தைகான பாக்கியம் உண்டு. பெரியவர்களே, குழந்தையாக வந்து பிறக்கும் ப்ராப்தம் உண்டு.
உடல்நலனில் அக்கறை முக்கியம். ஏப்ரல் -22 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. இந்தநிலையில், ஏப்ரல்- 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் உங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
சூரிய, அஸ்வினிம் ,மகம் நட்சத்திரங்களில் குழந்தை பிறக்கும். அக்டோபர்-31 பிறகு வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நீடித்திருக்கும். எல்லா காரியங்களும் வெற்றி மட்டுமே. நினைத்துப்பார்க்காத அளவுக்கு நன்மைகள் நடக்கும்.
குரு இருப்பது அதிகாரம் உள்ளிட்ட நல்ல விசயங்கள் நடக்கும். மீன ராசிக்கு ராகு பெயர்ச்சி, கன்னி ராசிக்கு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனால் வெற்றி உண்டு உங்களுக்கு..
உங்கள் எதிர்களை ஜெயிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு. கலிஃபோர்னியா, அமெரிக்க,கனடா செல்வதற்கு வாய்ப்பு.
திருப்பதி சென்று வழிபாடு நடத்துவது நல்லது. பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. புதிய மாற்றங்கள் நல்லது. கலை துறை சார்தவர்களுக்கு இந்த காலம் யோகம் உண்டு. யோக நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். பத்ரகாளியம்மன், மகாலெட்சுமியின் வழிபாடு யோகத்தை கொடுக்கும்.
சுவாதி நட்சத்திரம் தொழிலில் வெற்றி உண்டு. போராடி வெல்வீர். யோக அனுகூலங்கள் உண்டு. திருமண வாய்ப்புகள் நடக்கும். மீனாட்சி தாயாரின் அனுகிரகம் உண்டு. தூள் கிளப்பும் ஆண்டு இதுதான். வெங்கடாஜலபதிக்கு வீட்டிலேயே நெய் விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.
தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி?
1)முத்தமிழை குறிக்கும் முக்கனிகள் (மா, பலா, வாழை : வாழை எப்போதும் கிடைக்கும், ஆனால், மா, பலா ஆகியவை சித்திரை மாதம் மட்டுமே கிடைக்கும். அதனால் தான் தமிழர்கள் சித்திரையை புத்தாண்டாக கொண்டுள்ளனர்)
2)வெற்றிலை, பாக்கு
3)பூ
4)தேங்காய்
5)பணம் (ரூபாய் நோட்டு/காசு)
6)நகை (தங்கம்/வெள்ளி)
7)விளக்கு தீபம்
8)மஞ்சள்,குங்குமம்
9)கிண்ணத்தில் சிறிது அரிசி,பருப்பு
இந்த ஒன்பது பொருட்களையும் ஒரு கண்ணாடியின் முன் வைத்து , அந்த பிரதிபலிப்பை பார்த்தால் ஆண்டு முழுவதும் வளம் பெருகும் என்பது தமிழரின் தொன்றுதொட்ட நம்பிக்கை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)