மேலும் அறிய

Sukra Peyarchi 2024: அடித்து ஆடப்போகும் “ சுக்கிரன் “! சுக்கிர பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு என்ன பலன்?

சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.

அன்பார்ந்த வாசகர்களே  சுக்கிரன் ஜூலை 31ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியாக போகிறார்.  சூரியன் சுக்கிரன் புதன் எப்போதுமே மூன்று கட்டத்திற்குள் மாறி மாறி பிரவேசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்கள் காரணம் வானத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நெருங்கிய வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன  அதை நம் ராசி கட்டத்தில் பார்க்க முடிகிறது. வாருங்கள் சுக்கிர பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்…

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் நுழைவதால் மிகப்பெரிய முன்னேற்றமான  அதிசயத்தக்க  காரியங்கள் நடைபெறப் போகிறது. திடீர் அதிர்ஷ்டங்களையும் தன வரவுகளையும் நீங்கள்  எதிர்பார்க்கலாம்.  திருமணமானவர்களுக்கு உங்களுடைய  வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.  நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.  குடும்பத்தில் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் விலகும். தன வரவு தாராளமாக இருக்கும் .

ரிஷப ராசி :

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசி அதிபதியே நான்காம் வீட்டில் சென்று அமர்கிறார் என்ன ஒரு யோகம் நிலம், வீடு தொடர்பாக எந்த காரியத்தை நீங்கள் முன்னெடுத்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.  குறிப்பிட்ட சிலருக்கு  வங்கி கடன் மூலமாக வீடு கட்டுவது அல்லது நிலம் வாங்குவது  நல்லபடியாக முடியும். ஆடம்பரமான புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வருங்காலத்தில்  நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு குறித்து தற்போது திட்டமிடல் நடைபெறும்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  குலதெய்வனுக்காக முண்டு.  வீட்டை புதுப்பித்தல்  வீட்டிற்கு தேவையான பொருள் வசதிகளை செய்து தரல் போன்றவை நடைபெறும்.

மிதுன ராசி :

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் பிரவேசிக்கிறார் 12 ஆம் அதிபதி மூன்றாம் வீட்டில் பிரவேசிப்பதன் மூலம் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் . ஒரு காரியம் கைக்கு நெருக்கத்தில் வந்து அது  தள்ளிப்போகும்  என்ற நிலை உருவாகலாம் ஆனால் மனம்  தளர வேண்டாம் எதிர்காலத்தில் சிறப்பாக முடியும்.  உங்களைப் பற்றி அவதூறு பேசியவர்களுக்கு முன்பாக நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கப் போகிறீர்கள்.  வண்டி வாகனம் வாங்குவது தொடர்பாக காரியங்கள் சற்று தள்ளிப் போனாலும் எதிர்காலத்தில் நன்மை உண்டு.  புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மருத்துவத்தின் மூலமாக அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்..

கடக ராசி :

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார் பதினொன்றாம் அதிபதி இரண்டாம் வீட்டில் பயிற்சி ஆவதன் மூலமாக குடும்பத்தில் நிலவி வந்த சலசலப்புகள் விலகும்.  உங்களைப் பற்றி தற்போது அடுத்தவர்கள் பேசும் அளவிற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும்.  கடக ராசி பொருத்தவரை ஏற்கனவே லாப ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து உங்களுக்கு தேவையானவற்றை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் குரு பகவான் அமர்ந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் வரும்போது திடீர் தனயோகம் ஏற்படும்.  வருமானம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.

சிம்ம ராசி :

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசியிலேயே சுக்கிரன் வந்து அமர்கிறார் தொழில் ரீதியான பிரச்சனைகளை நீங்கள் இதற்கு முன்பாக சந்தித்து வந்தாலும் தற்போது அந்த நிலை மாறப்போகிறது.  ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு சிம்மத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்து தரப் போகிறார் .  குறிப்பாக  ஏற்கனவே நீங்கள் ஒரு வேலையை பார்த்து வந்தாலும் கூட மற்றொரு கூடுதலான வேலையை பார்த்து அதன் மூலம் வருவாய் ஈட்ட  போகிறீர்கள்.  மறைமுகமாக உங்களை தாக்கி வந்த எதிரிகள் இல்லாமல் போவார்கள்.  ஏதோ ஒரு இறுக்கமான மனநிலையில் இவ்வளவு நாள் நீங்கள் இருந்திருப்பீர்கள் அந்த நிலை தற்போது மாறப்போகிறது.

கன்னி ராசி :

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  சுக்கிரன் 12 ஆம் வீட்டில் வந்து அமர்வது யோகமான காலகட்டத்தை உருவாக்கும் குறிப்பாக தூக்கமே வராமல் தவித்து வந்த கன்னி ராசி அன்பர்களுக்கு தற்போது ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு நிம்மதியான உறக்கம் ஏற்படும்.  ஏழில் ராகு இருப்பதால் திருமண பேச்சு வார்த்தைகள் தள்ளிப் போக வாய்ப்பு உண்டு.  கன்னி ராசிக்கு இரண்டாம் அதிபதி சுக்கிரன் 12ஆம் வீட்டில் அமர்வதால் நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி வரும் சில சமயங்களில் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியவும் வாய்ப்பு உண்டு ஆனால் அது தற்காலிக பிரிவாகத்தான் இருக்குமே தவிர நிரந்தர பிரிவாக இருக்காது.  சக  ஊழியர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

துலாம் ராசி :

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் சுக்கிரன் வந்து அமர்கிறார்.  ராசி அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்வது எதிலும் மேன்மையை கொண்டு வரும்.  குறிப்பாக நீங்கள் எதற்கும் லாய்க்கு அல்ல  பிரயோஜனம் இல்லை என்று கூறியவர்கள் கூட உங்கள் வேலையை பார்த்து மெய் சிலிர்த்து போகும் அளவிற்கு நல்ல பலன்களை நடைபெறப் போகிறது.  குறிப்பாக நீங்கள் எடுத்து செய்யும் காரியங்களில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள்.  வீட்டில் உள்ள பெண்கள் மூலமாக உங்களுக்கு ஆதாயம் உண்டு.  வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள்.  எவ்வளவு பெரிய கடினமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்து வாழ்வில் வெற்றி பெறப் போகிறீர்கள்.

விருச்சக ராசி :

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சுக்கிரன் அமர்வது  கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றமான காலகட்டமாக அமைகிறது.  குறிப்பாக ஏற்கனவே குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் அது குருவின் பார்வையால் மறைந்து போகிறது.  ஒருவேளை ஏற்கனவே நீங்கள் சிக்கலில் இருந்தால் அது பெரிதாகாமல் குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.  வரன்கள் வாயில் தேடி வரும்.  பண சிக்கல்கள் சிறிது சிறிதாக விலகப் போகிறது.  ஏழாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பது குடும்பத்தில் நல்ல கலகலப்பான சூழ்நிலையை உருவாக்கும்.  வேலையில் சுறுசுறுப்புடன் செயல்பட போகிறீர்கள் அதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.

தனுசு ராசி :

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்கிறார்.  பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது நிச்சயமாக நீங்கள் கேட்டதும் கிடைக்கும் கேட்காததும் கிடைக்கும்.  அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் வாயிலில் வந்து நிற்கப் போகிறார்.  ஆறாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருக்கும் போது உங்களுக்கு  இருந்த நாள்பட்ட நோய்கள் கூட விலகும்.  மலையளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு சிறிதாக போகும்.  சுக்கிரன் பணத்தைக் குறிப்பதால் ஆடம்பரமான வாழ்க்கை எதிர்பார்க்கும் உங்களுக்கு அது போன்ற வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.  பதினொன்றாம் அதிபதி 9 ஆம் வீட்டில் அமர்வதால் குருமார்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி :

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைகிறார்.  திடீர் அதிர்ஷ்டங்கள் தன வரவு ஏற்படும்.  எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகப் போகிறது. காரணம் மகர ராசிக்கு சுக்கிரன் பத்தாம் அதிபதி.  ஐந்தாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் மன சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவது எதிர்பாராத தன வரவை உங்களுடைய வியாபாரத்திலோ அல்லது தொழிலிலோ உண்டாக்கும்.  வாடிக்கையாளர்களின் படங்களை முதலீட்டாளர்களுக்கு  கொண்டு வந்து கொடுக்கும் கிரக காரகம் தான் சுக்கிரன்.  அப்படிப்பட்ட சுக்கிரன் உங்கள்  உங்களுக்கு அஷ்டமத்தில் இருப்பது அதிர்ஷ்டங்களை தான் கொண்டு வரும்.  எவ்வளவு பாடுபட்டாலும் வெற்றி அடைய முடியவில்லை என்று வருத்தத்தோடு இருக்கும்  மகர ராசி அன்பர்களுக்கு தற்போது வெற்றிக்கான படிக்கட்டுகள்  கண்களுக்குத் தெரியும்.

கும்ப ராசி :

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் அமர்கிறார் சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் உங்கள் ராசியை பார்ப்பதால் பொலிவு கூடும் உற்சாகமாக செயல்பட போகிறீர்கள். துவண்டு கிடந்த உங்களுக்கு தோல் தூக்கி விட ஆட்கள் வரப்போகிறார்கள்.  எதற்கெடுத்தாலும் சண்டைகள்  சென்று கொண்டிருக்கும் குடும்பத்தில் சமாதான புறாக்கள் பறக்கப் போகிறது.  கும்பத்தைப் பொறுத்தவரை நான்காம் வீட்டில் குரு இடப்பெயர்ச்சியை  கொடுத்தாலும் ஏழாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்களுடைய தேக ஆரோக்கியம் கூடும் அதேபோல மற்றவர்களுக்கு முன்பாக நீங்கள் ஒரு ஸ்டார் போல தெரிவீர்கள்.  பண வரவு தாராளமாக இருக்கும்.  சுபச் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீன ராசி :

அன்பார்ந்த மீன ராசி அன்பர்களே, உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் செல்கிறார்.  உங்கள் ராசியின் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டில் செல்வது யோகா மான பலன்களை கொண்டு வரும். காரணம் எட்டாம் அதிபதி அதன் வீட்டிலிருந்து லாப ஸ்தானமான ஆறாம் வீட்டில் செல்கிறது எவ்வளவு பெரிய கடன்கள் இருந்தாலும் அதை அடைப்பதற்கான வழி வகைகள் ஏற்படும்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Embed widget