மேலும் அறிய

Sevvai Peyarchi 2024: மாற்றம் தரும் செவ்வாய் பெயர்ச்சி! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன?

Sevvai Peyarchi 2024 in Tamil: செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 12 ராசிக்குமான பலன்களை கீழே விரிவாக காணலாம்.

செவ்வாய் பெயர்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, 12 ராசிக்குமான பலன்களை கீழே காணலாம்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசி அதிபதி செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி  தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ராசி அதிபதி பத்தாம் வீட்டில் உச்சம் பெறுவதால்  நினைத்த காரியங்கள் ஈடேறும். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலையில் தொய்வு, வேறு வேலைக்கு மாறலாமா? வேண்டாமா? என்று நீங்கள் சிந்தித்து கொண்டு இருந்தீர்கள் என்றால்,  தற்போது நல்ல வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள்.  வேலை மாற வேண்டும் என்று எண்ணியிருந்த மேஷ ராசி வாசகர்களுக்கு வேலை மாற்றம் உறுதியாக நடக்கும். அதுவும் நல்ல வேலை மாற்றமாகவே இருக்கும்.  ஒன்றாம் அதிபதி எட்டாம் அதிபதி பத்தாம் வீட்டில் உச்சம் பெறுவதால் எதிர்பாராத திடீர் தன வரவு உண்டு.  வீடு மனை லாபம் உண்டு.

ரிஷப ராசி :

ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய பனிரெண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.  நீண்ட தூர பிரயாணம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பு.  ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருக்க ரிஷப ராசிக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் கைகூடி வரப்போகிறது. 

உங்களுடைய இல்லம் தேடி நல்ல வரன் அமையப் போகிறது.  பிப்ரவரி 5ம் தேதி நடைபெறப்போகும் செவ்வாய் பயிற்சிக்கு பிறகு திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும்.  ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த பெரியோர்களே உங்களுக்கான வாய்ப்பு வந்திருக்கிறது.  கிரிவலப் பாதையை சுற்றலாம் மலை ஏறலாம் இறங்கலாம்.  அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களை முடிக்கலாம். இப்படி தெய்வ அனுகூலம் மிகுந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் சிறிய பிரார்த்தனை கூட பெரிய அளவில் பணம் தரப் போகிறது.  அனைத்தும் சுகமாக முடியும்.

மிதுன ராசி :

மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் அதாவது உங்களுடைய லாபாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி அஷ்டம ஸ்தானத்தில் வீற்றிருக்க  உங்களைப் பிடித்திருந்த நோய் விலகப் போகிறது.  நீண்ட நாட்களாக நோய் தொந்தரவில் இருக்கும் மிதுன ராசி வாசகர்களே, உங்களுக்கான பொன்னான நேரம் மருத்துவத்தின் மூலமாகவோ மருந்தின் மூலமாகவோ அறுவை சிகிச்சையின் மூலமாகவோ ஏதாவது ஒரு வழியில் நீங்கள் குணமாக போகிறீர்கள்.  அதிகப்படியான கடன் சுமை உங்களுக்கு இருக்கிறது என்று நினைத்திருக்கும் வாசகர்களே,  கடன் சுமை படிப்படியாக குறையும்.  எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் தனவரவையும் உங்களுக்கு கொண்டு வரப் போகிறார்.  எதிரிகள் அழிவார்கள் இல்லாமல் போவார்கள்.  அனைத்தும் சுகமாக முடியும்.

கடக ராசி :

கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார்.  உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி  செவ்வாய் ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவதால் நீங்கள் நினைத்த காரியம் அத்தனையும் நிறைவேற போகிறது. கடக ராசிக்கு ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆகி, அவர் ஏழாம் பாவத்தில் உச்சம் பெறுவது நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்த தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்கப் போகிறது. ஏழாம் பாவம் என்பது  கலக்குற பாவம் என்பதால் பிரிந்திருந்த தம்பதியரும் ஒன்று கூடுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும் உங்களை புரிந்து கொள்ளாத நண்பர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் வெற்றிகள் உங்கள் வாசற்படியில் வந்து அமரப் போகிறது.  அனைத்தும் சுகமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்.

சிம்ம ராசி :

சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9ஆம் அதிபதி ஆறாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகப்போகிறது.  ஆறாம் வீடு சத்துரு ஸ்தானம் என்பதால் எதிரிகள் உங்களை அழிப்பதற்கு நினைத்தாலும் அவர்களின்  மறைமுக எதிர்ப்பை உங்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடும்.  வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும்  அதையெல்லாம் எதிர்கொள்கின்ற மன ஆற்றலும் தைரியமும் இந்த காலத்தில் உருவாக போகிறது.  நீண்ட நாட்களாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களின் கனவு நடக்கப் போகிறது.  நான் ஒரு தொழில் தொடங்க வேண்டும். அதற்கான கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா? என்று  காத்திருக்கும் சிம்ம ராசி வாசகர்களே நல்ல செய்தி நீங்கள் கேட்ட கடன் கிடைக்கும்.  அனைத்தும் நன்மையாக  நடக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.

கன்னி ராசி :

கன்னி ராசி வாசகர்களே உங்களுக்கு  பிப்ரவரி 5ம் தேதி பெயர்ச்சியாக போகும் செவ்வாய் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம். உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதி மற்றும் எட்டாம் அதிபதியான செவ்வாய் உங்களுடைய  எண்ணத்தின் ஸ்தானமான ஐந்தாம் பாவகத்தில் உச்சம் பெறுகிறார். நீண்ட நாட்களாக ஆசையுடன் எதிர்பார்த்த ஒன்று நிறைவேற போகிறது. உங்களுக்கு மனதிற்கு இனிய பெண் வரனாக அமையப் போகிறார்.

நீங்கள் ஒரு வேலை கன்னிராசி பெண்ணாக இருந்தால்  உங்களுக்கு மனதிற்கினிய ஆண் வரனாக அமையப் போகிறார்.  லக்னத்தில் ஏற்கனவே கேதுவை வைத்திருக்கும் உங்களுக்கு செவ்வாய் பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பது மிகச்சிறந்த காலம்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி, அனைவர் முன்னிலையிலும் பாராட்டை பெறுவது.  அனைவரும் உங்களைப் பார்த்து நீங்கள் மிகப்பெரிய புத்திசாலி என்று புகழப்போகிறார்கள்.  ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால், பலவித மன சிந்தனை உடையவராக மாறப் போகிறீர்கள்.  இந்த காரியத்தை நான் எப்படி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லையே என்று மனக்குமுறலோடு இருந்தீர்கள் அல்லவா பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு பாருங்கள். மன தைரியம் பன்மடங்காக உயர்ந்து அந்த காரியத்தை நான் செய்து முடிக்க போகிறேன் என்று சொல்லப் போகிறீர்கள்.

துலாம் ராசி :

துலாம் ராசி அன்பர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதியான  செவ்வாய் உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் உச்சம் பெற போகிறார். வீடு மனை வாகனத்தைக் குறிக்கும் ஏழாம் அதிபதி, நான்காம் வீட்டில் உச்சம் பெற்றால் நீண்ட நாட்களாக திருமண காரியங்கள் நடைபெறாமல் தள்ளிப்போனதல்லவா? அந்த காரியங்கள் தற்போது நடைபெறப் போகிறது.  வீடு மனை வீட்டு மனை நிலப்பரப்பு நிலம் விவசாய நிலம் என்று உங்களுக்கு சொந்தமான அனைத்துமே உங்களுக்குத்தான் சாதகமாக முடியும். 

ஒருவேளை ஒரு  நிலத்தை விற்று வேறு ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களுக்கு அந்த காரியங்களும் சாதகமாக முடியப்போகிறது.  வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த உங்களுக்கு சாதனைக்கான நேரமாக பிப்ரவரி 5ஆம் தேதி முதல் உங்களுடைய வாழ்க்கை ஒளிமயமாக மாறப்போகிறது.  இரண்டாம் வீட்டு அதிபதியான செவ்வாய் நான்காம் பாவகத்தில் உச்சம் பெறும்போது நீங்கள் மிகப்பெரிய சவுரியவனாக  சொகுசு வாழ்க்கையை வாழ கடவுள் உங்களுக்கு துணை புரிய போகிறார்.  அனைத்துமே சுபமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்.

விருச்சக ராசி :

விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசியாதிபதி மூன்றாம் பாவகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உங்களுக்கு ஆறாம் அதிபதியும் கூட, மூன்றாமிடம் என்பது என்ன வெற்றியை குறிக்கக்கூடிய ஸ்தானம் நீங்கள் ஒரு செயலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அந்த செயல் வெற்றியானால் தானே அந்த காரியம் ஜெயித்ததாக அர்த்தம். அப்படி என்றால் வெற்றி ஸ்தான அதிபதி வலுவுடன் இருக்க வேண்டுமா இல்லையா?  அந்த காலகட்டம் தான் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் உங்களுக்கு நிகழப் போகிறது.

வெற்றி ஸ்தான அதிபதி ராசியாதிபதி வெற்றி ஸ்தானத்தில் அமர்ந்து நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேற்றி முடிப்பார்.  ஒருவேளை பழைய எம்ஜிஆர் படத்தில் வருவது போல நீங்கள் கோழையாக இருக்கலாம். அப்படிப்பட்ட எந்த ஒரு கோழையையும் வீரனாக, மாவீரனாக மாற்றுகின்ற ஸ்தானம் தான் வெற்றி ஸ்தானமான மூன்றாம் பாவகம்.  அப்படிப்பட்ட ஸ்தானத்தில்  ராசி அதிபதி உச்சம் பெறுவது நீங்கள் தைரியமானவராக திறமையானவராக மேலும் பல சாதனைகளை புரிபவராக மாறப் போகிறீர்கள்.  வாழ்க்கையில் அனைத்தும் வெற்றியாக முடியட்டும் வாழ்த்துக்கள் வணக்கம் .

தனுசு ராசி :

தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாவகத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் சிறு சிறு குழப்பம், சலசலப்புகள் இருந்து வந்தது அல்லவா?  அதெல்லாம் விலகி உங்களுக்கு புத்துணர்வு குடும்பத்தில் குதூகலம் ஏற்பட போகிறது.  அட என்னடா இது வாழ்க்கை. ஒரு  இயந்திரம் போலவே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமே, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவே  முடியவில்லை என்று ஏங்கி இருந்த உங்களுக்கு  குடும்பத்துடன் நேரம் செலவழிக்க மகிழ்ச்சி பொங்கும் அளவிற்கு சுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது. 

உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதியான செவ்வாய் இரண்டாம் பாவகத்தில் உச்சம் பெறும்போது வீட்டில் மழலை குரல் கேட்கப் போகிறது.  நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் வெற்றியாக முடியப்போகிறது.  ஏற்கனவே ஐந்தாம் பாவகத்தில் குரு பகவான் அமர்ந்து மிகப் பெரிய சக்தியை ஐந்தாம் பாவத்திற்கு கொண்டு வந்தார் அல்லவா, அதேபோல இரண்டாம் பாவகத்தில் உச்சம் பெறும் செவ்வாய் பகவான் அதே ஐந்தாம் பாவகத்தின் சக்தியையும் 12 ஆம் பாவகத்தின் நீண்ட தூர பிரயாணத்தின் சக்தியையும் கொண்டு வரப் போகிறார்.  குடும்பத்துடன் நீண்ட தூர பிரயாணம் அந்த பிரயாணங்களின் மூலம் மகிழ்ச்சி போன்றவை உங்களுக்கு கிட்ட போகிறது.  மொத்தத்தில் இந்த செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான மதிப்பிற்குரிய நீங்கள் சொல்லும் சொல் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய பெயர்ச்சியாகத்தான் அமையப்போகிறது.  

மகர ராசி :

மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே நான்காம் அதிபதியும், லாவாதிபதியுமான செவ்வாய் உச்சம் பெற போகிறார். ராசியில் ஒரு கிரகம் உச்சம் பெறுவது என்றால் சொல்லவா வேண்டும்? உங்களை கையிலே பிடிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய புகழின் உச்சத்திற்கு செல்ல போகிறீர்கள். என்னை யாரும் மதிக்கவில்லை என்னுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் இல்லை, சமுதாயத்தில் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று ஏக்கத்துடன் பல நாட்களாக நீங்கள் இருந்திருக்கலாம். 

வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் உங்கள் ராசியில் உச்சம் பெறும்போது கண்டுகொள்ளாதவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரப் போகிறார்கள். உங்களைப் புறக்கணித்தவர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய ஆளாய் உயரப் போகிறீர்கள்.  வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு சாதகமாகத்தான் முடியப்போகிறது.  வீடு மனை நிலம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கப் போகிறது.   ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு, இரண்டாம் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப் போகிறது.  பல காரியங்களில் வெற்றி உங்களைத் தேடி வருவதால் நிச்சயமாக நீங்கள் சாதனையாளராகவே திகழப் போகிறீர்கள்.  

கும்ப ராசி :

கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில், மூன்றாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் உச்சம் பெறப்போகிறார். நீண்ட நாட்களாக வேலை மாற்றம் தொழில் மாற்றம் இரண்டாவது தொழில் செய்வது புதிய தொழிலில் முதலீடு போடுவது என்று எண்ணியிருந்த உங்களுக்கு இதுதான் பொற்காலம்.  புதிய முதலீடுகள் மூலம் தொழில் தொடங்கி, அதில் பிற்காலத்தில் நீங்கள் லாபம் பார்க்கலாம். ஆனால் தற்போது பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த செவ்வாய்  மூலமாக பெயர்ச்சியின், சுப விரயங்கள் தான் அதிகமாக நடக்கப் போகிறது.  சற்று அலைச்சல்கள் இருந்தாலும் அது ஆதாயமான அலைச்சலாகவே தான் இருக்கும். 

தூக்கமின்மை பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த கும்ப ராசி அன்பர்களே நிம்மதியான உறக்கத்தை பெற போகிறீர்கள்.  மூன்றாம் அதிபதி பனிரெண்டாம் வீட்டில் உச்சம் பெறுவது சகோதர சகோதரிகளிடத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இருப்பினும் அவர்கள் மூலம் பெரிய ஆபத்தெல்லாம் ஒன்றும் வந்து விடாது  சிறிய செலவுகள் ஏற்பட்டாலும் அவர்கள் மூலமாக அது  சுபச் செலவாக  தான் இருக்கும்.  பத்தாம் அதிபதி பனிரெண்டாம் வீட்டில் உச்சம் பெறுவது வெளிநாடு வெளியூர் வெளி மாநிலம் இது போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற காத்திருந்தவர்களுக்கு பொன்னான செய்தி செவிகளுக்கு வந்து சேர போகிறது.  

மீன ராசி :

மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 9 ஆம் அதிபதியும், இரண்டாம் அதிபதியுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் பதினொன்றாம் வீட்டில் அமர்கிறார்.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே என்று  வாழ்க்கை எப்படி போகிறதோ? அப்படியே சென்று கொண்டிருக்கும் உங்களுக்கு இதுதான் பொற்காலமாக அமையப் போகிறது.  லாப ஸ்தானத்தில் ஒரு கிரகம் உச்சம் பெறுகிறது என்றால் நீங்கள் நினைத்ததும் நடக்கும், நினைக்காததும் நடக்கும்.  இரண்டாம் அதிபதியான தனஸ்தான அதிபதி பதினொன்றாம் வீட்டில் உச்சம் பெறும்போது உங்களுடைய வங்கி கணக்கில் சேமிப்பு பணம் உயரப் போகிறது.

மீன ராசிக்கு 9ஆம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருப்பதால் போட்டி போட்டுக்கொண்டு உங்களைத் தேடி பெரியவர்கள் வரப் போகிறார்கள்.  பெரியவர்கள் என்றால் உயர் பதவியில் இருக்கிறவர்கள்  மட்டுமல்ல, சமுதாயத்தில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறவர்கள் கூட உங்களை நாடி வரப் போகிறார்கள்.  மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  புத்துணர்வு ஏற்படும்.  தொடுகின்ற அத்தனை காரியங்களிலும் வெற்றி கிட்டும்.  இப்படி எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமைவதால் இந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறப்போகும் செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு பொன்னான பெயர்ச்சியாகவே இருக்கும்.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget