மேலும் அறிய

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

Karthigai Deepam 2024: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம் ஆகும். சிவ பக்தர்களுக்கு கொண்டாட்டமான பண்டிகையாக திருக்கார்த்திகை தீபம் திகழ்கிறது. உலகெங்கும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபம் கோலாலகமாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் எப்போது?

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம்  ஏற்றப்படும்.

கார்த்திகை தீபம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகும். பஞ்சபூத தலங்களில் முதன்மையானதும், அக்னி தலமாகவும் திகழும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

களைகட்டும் திருவண்ணாமலை:

கார்த்திகை மாதம் பிறந்தது முதலே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கியது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி மகாதேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக, ராஜகோபுரம் உள்ளிட்ட அண்ணாமலையார் கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாவை காண சுமார் 35 லட்சம் மக்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

முருகன் கோயில்களிலும் கொண்டாட்டம்:

கார்த்திகை தீப நாளில் கோயிலின் உள்ளே அதிகாலையில் பரணி தீபத்தை காண 7 ஆயிரத்து 500 பேருக்கும், மாலையில் மகா தீபத்தை காண 11 ஆயிரத்து 500 பேருக்கும் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகாதீபத்த காண மலையேறும் பக்தர்களுக்கு உடல் பரிசோதனைக்கு பிறகே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை தீபத் திருநாளை சிவாலயங்கள் மட்டுமின்றி முருகப் பெருமானின் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்படும்.

முன்னேற்பாடுகள் தீவிரம்:

கார்த்திகை தீபத் திருநாளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் வசதி உள்ளிட்டவற்றிற்கான முன்னேற்பாடுகளை காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்தந்த கோயில் நிர்வாகங்கள் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு  திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget