Rasipalan Today: ரிஷபத்துக்கு சுகம்...! கன்னிக்கு பாராட்டு..! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி..?
Rasipalan Today: இந்த நாள் எந்தெந்த ராசியினர் என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
இந்த நாள் நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்வீர்கள். உங்களால் பலருக்கு இன்று நன்மைகள் ஏற்படும். வீட்டில் நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்
இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். செல்போன் வழி தகவல் மகிழ்ச்சியை அளிக்கும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல் கேட்டு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும்.
மிதுனம்
மனதில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்கால திட்டங்கள் குறித்து தீவிர சிந்தனை ஏற்படும். துணிச்சலாக சில முடிவுகளை மேற்கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தொழில்புரியும் இடங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக அமையும்.
கடகம்
இந்த நாள் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரம் சாதகமாக முடியும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக அமையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும்.
சிம்மம்
இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் நாள். உடல்நலத்தில் நீடித்து வந்த சிக்கல் சரியாகும். மனதில் நீடித்து வந்த கவலை அகலும். குடும்பத்தில் புது வரவு உண்டாகும். மங்கல செய்திகள் காதில் ஒலிக்கும். காதல் கல்யாணமாக கைகூட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.
கன்னி
தொழில்புரியும் இடங்களிலும், வீடுகளிலும் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
துலாம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்
மனதில் அமைதி ஏற்படும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் இருந்த மனக்குழப்பம் அதிகரிக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
தனுசு
நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினர் மீது பாசம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
மகரம்
மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.
கும்பம்
வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும்.
மீனம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.