RasiPalan Today: மிதுனத்திற்கு மதிப்பு... துலாமுக்கு தேவை கவனம்..இன்றைய ராசியின் பலன்கள் என்ன?
RasiPalan Today September 03: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 03.09.2022
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை
இராகு :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, வாழ்க்கை துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. புதுவிதமான ஆசைகள் மனதில் உண்டாகும். இணையம் சார்ந்த துறையில் உள்ள சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களுடன் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். நண்பர்களின் வழியில் அலைச்சலும், அமைதியின்மையும் ஏற்படும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் பிறக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் எதையும் செய்ய கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழமை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, வியாபாரம் ரீதியான பயணங்களில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவாத திறமைகளை சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவது நல்லது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனையின் போக்கில் சில சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, பத்திரம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புதிய முயற்சிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். எந்தவொரு செயல்பாட்டிலும் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய தேடல் பிறக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் மறைமுக ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.