![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rasipalan 30, July 2023: ரிஷபத்துக்கு விவேகம்... சிம்மத்துக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today July 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
![Rasipalan 30, July 2023: ரிஷபத்துக்கு விவேகம்... சிம்மத்துக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! Rasi palan today tamil 30th july 2023 daily horoscope predictions 12 zodiac signs astrology nalla neram panchangam Rasipalan 30, July 2023: ரிஷபத்துக்கு விவேகம்... சிம்மத்துக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/df5cd579742a0bcdbf1ca185bf4fd7011690649252185574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
RasiPalan Today July 30:
நாள்: 30.07.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம் :
காலை 8.00 மணி முதல் காலை 9.00 மணி வரை
மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.
ரிஷபம்
விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
மிதுனம்
பணி சார்ந்த விஷயங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய சூழல் ஏற்படும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.
கடகம்
அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
சிம்மம்
வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமையை வெளிப்படுத்துவதற்கேற்ப சாதகமான வாய்ப்புகள் அமையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
கன்னி
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பரிவு வேண்டிய நாள்.
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். இடமாற்ற முயற்சிகள் கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் விலகும். இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
விருச்சிகம்
எதிர்பார்த்த சில வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பரிசுகள் நிறைந்த நாள்.
தனுசு
முகத்தில் புதிய பொலிவுகள் உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். மற்றவரிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். நிம்மதி நிறைந்த நாள்.
மகரம்
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு உண்டாகும். அசதிகளின் மூலம் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
கும்பம்
அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
மீனம்
உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)