மேலும் அறிய

Rasipalan: கடகத்துக்கு மகிழ்ச்சி... கன்னிக்கு தன்னம்பிக்கை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today April 27: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 27.04.2023 - வியாழக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்த குழப்பம் விலகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீது ஆர்வம் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

மிதுனம்

பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் பிறக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

கடகம்

குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துகள் பகிர்வதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நிர்வாக பணிகளில் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். நண்பர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் விரயமும், அனுபவமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். இணையம் சார்ந்த துறைகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். புதுவிதமான ஆடைகளின் மீது ஆர்வம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம்

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் செல்வது தொடர்பான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

தனுசு

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பொழுதுபோக்கு நிமிர்த்தமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். கவலைகள் குறையும் நாள்.

கும்பம்

தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மை குறையும். இயந்திரம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

மீனம்

சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் விலகும். இலக்கியங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப சாதுரியமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். தூர தேச பயணங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget