Today Rasipalan September 26: மிதுனத்துக்கு நிதானம்.. சிம்மத்துக்கு சுகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan September 25: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 26.09.2023 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். இன்று மட்டும் எந்த ஒரு விஷயத்திலும் பிடிவாதமாக இருக்கக் கூடாது. வியாபாரத்தில் புதிய நன்மை கிடைக்கும். இடமாற்றம் கூட ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் பேசாமல் தள்ளி இருப்பர்கள் பேசுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உயர்வு நிறைந்த நாள்.
ரிஷபம்
வேலைகளில் நிதானமாக செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரில் வேலை நிமித்தமாக செல்வது அல்லது நண்பர்களுடன் வேலையில் இருப்பதை யோசனை செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் பிறக்கும். வசதிகள் மேம்படும் நாள்.
மிதுனம்
திருமண உறவில் நிதானமாக இருக்க வேண்டும். வியாபார பணிகளை பொருமையாக கையாள வேண்டும். மனதில் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வழக்கு நிமித்தாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணங்களில் விவேகம் வேண்டும். உடன்பிறந்த சகோதரர்/சகோதரிடம் அனுசரித்து போக வேண்டும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
கடகம்
இன்றைய நாளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நினைத்த காரியங்கள் கைக்கூடும். வேலை விஷயத்தில் பதவி உயர்வு கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்ப நபர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். பணி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.
கன்னி
நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவதில் விவேகம் வேண்டும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கவலைகள் குறையும் நாள்.
துலாம்
உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியான சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு உயரும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு
பொருளாதார நெருக்கடிகள் குறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
மகரம்
பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் புதிய பாதைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
மீனம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனம் நிறைந்த நாள்.