மேலும் அறிய

Rasipalan 26 May, 2023: மேஷத்துக்கு பக்தி... கடகத்துக்கு யோகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today May 26: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 26.05.2023 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 10.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவு பிறக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.  

மிதுனம்

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகளின் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். களிப்பு நிறைந்த நாள். 

கடகம்

மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பத்திரம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மூலிகை மற்றும் மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத விரய செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சமையல் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

சிம்மம்

மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பம் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

கன்னி

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். மனதில்  சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியம் வேண்டிய நாள்.

துலாம்

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  ஒப்பந்தம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுகம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துகள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. சேவை தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். தூர தேசப் பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

செயல்பாடுகளில் சோம்பேறித்தனத்தின் மூலம் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு வைத்துக் கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அனுபவம் நிறைந்த நாள்.

மகரம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தந்தைவழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

மீனம்

கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget