Rasipalan November 25: தனுசுக்கு மதிப்பு கூடும்... சிம்மத்துக்கு தைரியம் தேவை.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today November 25: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 25.11.2022
நல்ல நேரம்:
காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
இராகு:
மதியம் 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
காலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
உடன் பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உத்யோகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான கோப்புகாள் மற்றும் பொருட்களின் மீது கவனம் தேவை. சிறு தொழில் புரிபவர்கள் கவனத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
ரிஷபம்
வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வேலையாட்கள் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அசதி குறையும் நாள்.
மிதுனம்
உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய தேடல் பிறக்கும். வரவு மேம்படும் நாள்.
கடகம்
வேலை நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமையும், புரிதலும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், அதை சார்ந்த முயற்சிகளும் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.
சிம்மம்
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தைரியம் வேண்டிய நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். சுபகாரியம் சார்ந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எந்தவொரு செயல்பாடுகளிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். ஏற்ற, இறக்கமான நாள்.
துலாம்
இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சொத்துக்கள் சார்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.
விருச்சிகம்
உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டாரங்களில் நட்பு மேம்படும். பலவிதமான குழப்பங்களுக்கு நிலையான முடிவினை எடுப்பீர்கள். உறவினர்களால் வீண் விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
தனுசு
வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனை மற்றும் வாகனம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை அன்பான முறையில் எடுத்து கூறுவதால் உங்களின் மீது நம்பிக்கை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
மகரம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்யோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் வியாபரம் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். நட்பு மேம்படும் நாள்.
கும்பம்
புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. திருப்தி நிறைந்த நாள்.
மீனம்
நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வேலையாட்களை அனுசரித்து செல்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.