Rasipalan November 23: மகரத்துக்கு நிம்மதி...! சிம்மத்துக்கு மேன்மை..! உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்..
RasiPalan Today November 23: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 23.11.2022
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவதால் சேமிப்பு குறையும். போட்டி நிறைந்த நாள்.
ரிஷபம்
தனவரவு தேவைக்கு ஏற்ப கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியான சில பணிகள் எளிதில் முடியும். சிலருக்கு உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். நட்பு மேம்படும் நாள்.
மிதுனம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
கடகம்
பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். சிக்கனத்துடன் செயல்பட்டால் செலவுகள் கட்டுபாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் கவனத்துடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் உதவியால் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பொறுப்புகள் குறையும். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
புதுவிதமான சிந்தனைகளின் மூலம் கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். மனதில் ஏற்பட்ட பழைய சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. சிலருக்கு இழுபறியான தனவரவு கிடைக்கும். உயர்கல்வியில் மந்தமான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். அலுவலக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேம்படும். எதிர்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.
கும்பம்
வியாபாரத்தில் எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். செலவுகளை குறைத்து கொள்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரம் ரீதியான கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதால் சாதகமான சூழல் ஏற்படும். உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். திருப்தி நிறைந்த நாள்.