Rasipalan Today, June 21: விருச்சிகத்துக்கு இன்பம், துலாமுக்கு உயர்வு... உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, June 21: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 21.06.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 4.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். திருப்தி நிறைந்த நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். முன்கோபத்தால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்கள் உங்களின் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் இருந்துவந்த சோர்வு குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்களை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அசதி குறையும் நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட முறையில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பயனற்ற இன்னல்களை தவிர்க்க முடியும். வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொல்லைகள் விலகும் நாள்.