மேலும் அறிய
Rasi Palan Today, Sept 09: இன்று திங்கட்கிழமை! அமோகமாக இருக்கப்போகும் ராசிகள் என்னென்ன? 12 ராசிக்கும் பலன்கள்!
Rasi Palan Today, September 09: செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்
Source : abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 09, 2024:
இன்றைய நாளில் சந்திரன் விருச்சிகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய ராசிக்கு சந்திரன் தரும் பலன்களை பார்க்கலாம்...
மேஷ ராசி :
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய காரியங்களை எதுவும் தொடங்க வேண்டாம். மற்றவரிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பொறுமையாக இருந்தால் பெருமையாக வாழலாம்.
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் கொடுப்பார்கள். அதிகப்படியான சிந்தனையில் மூழ்கி இருக்கக்கூடும். கடன் சுமை குறையும் நாள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
மிதுன ராசி :
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே எதிர்காலத்தை குறித்து நல்ல திட்டங்களை போடுவீர்கள். தாய் வழி உறவினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையின் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
கடக ராசி :
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான காரியங்கள் வெற்றி அடையும். மதியத்திற்கு மேல் சற்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க கூடும். சிறப்பான நாள்.
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். எவ்வளவு பெரிய சிக்கலான காரியங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உங்களின் உதவிகள் தேவைப்படும். மனதில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே பொறுமையே பெருமை என்று இருக்கக்கூடிய நாள். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பட்டம் பதவி தேடி வரக்கூடிய நாள்.
துலாம் ராசி :
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கப் போகிறது. பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வேலையில் அனுகூலமான பலன்களை நடைபெறும்.
விருச்சிக ராசி :
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் செல்கின்ற காரணத்தினால், ஏற்றங்கள் இரக்கங்கள் கலந்து நடைபெறும் நாள். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். ராசிக்குள் சந்திரன் பிரவேசிக்கப் போவதால் ஆன்மீகத்தில் மனம் செல்லும்.
தனுசு ராசி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே முடிக்க வேண்டிய வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். மனம் சற்று ஆன்மீகத்தில் செல்லும். பழைய காரியங்களை மீண்டும் அசை போடக்கூடும். எதிர்காலத்திற்கு தேவையான சில காரியங்களை தற்போது திட்டமிடுவீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே மகர ராசிக்கு சிறப்பான நாள். பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். மனம் அமைதியாக இருக்கும். மற்றவர்களை புரிந்து கொள்ள ஏற்ற நாள் இது.
கும்ப ராசி :
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே பக்தியோடு இந்த நாளை ஆரம்பிப்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக நண்பர்கள் வந்து பேசுவார்கள். நீண்ட தூர பயணங்களை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.
மீன ராசி :
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே தொட்டது தொடங்கும் நாள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள். வேலை சுமை இருந்தாலும் கூட அதை இழுத்து போட்டுக் கொண்டு செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தாரோடு நேரம் செலவிடும் காலம்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement