Rasi Palan Today Sept 02: துலாம் வாக்குவாதம் வேண்டாம், விருச்சிகத்துக்கு எடுத்த காரியம் வெற்றிதான்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 02: செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 02, 2024:
அன்பார்ந்த வாசகர்களே சந்திரன் சிம்மத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுக்கு இன்றைய தினத்தில் அம்மாவாசை யோகம் ஏற்பட்டிருக்கிறது இதனால் நீங்கள் நினைத்த காரியம் அப்படியே நடைபெறும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தோடு நேரம் செலருவதற்கான காலகட்டம்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசியில் உச்சமாகும் சந்திரன், சூரியனோடு சேர்ந்து உங்களின் நான்காம் வீட்டில் இருப்பதால் சௌகரியமாக நாள் செல்லும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பல அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அது உங்களிடம் வந்து சேரும்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவத்தில் சூரிய சந்திரன் இணைவு மிகப்பெரிய யோகத்தைக் கொண்டு வரும் காரணம் சிம்மத்தில் இருந்து உங்களுடைய ராசி பதினொன்றாக வருவதால் நீங்கள் செய்கின்ற அத்தனை காரியங்களும் வெற்றி பெறும் குறிப்பாக இதுவரை நீங்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்த காரியங்களில் கூட இன்று வெற்றி பெறப் போகிறீர்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசி அதிபதி சூரியனோடு சேர்ந்து இருக்கும் இந்த காலகட்டத்தில் அரசியல் தொடர்பு அரசாங்க பதவிகள் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். வங்கி கணக்கில் பணவரவு உண்டாகும் நிம்மதியாக நாள் நகரும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் சிறப்பான நாள்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசியிலேயே 12 ஆம் அதிபதி அமாவாசை யோகத்தில் இருப்பதால் விரயங்கள் சுப விரயங்கள் ஆக மாறும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தலைமை பதவி உங்களை தேடி வரும் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்று பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் குறிப்பாக அடுத்தவர்களை புரிந்து கொள்ள ஏற்ற நாள்.. எதற்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அந்த பலனை அனுபவிக்கும் நாள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் சூரியன் சந்திரன் அமாவாசை யோகம் இருப்பதால் நாள் ஆரம்பம் முதலில் சிறப்பாக செல்லும் ஆனால் அஷ்டமத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது சில தேவையற்ற வீண் பஞ்சாயத்துகளை கொண்டு வரலாம் ஆகையால் நீங்கள் யாரிடமும் மீன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மற்றபடி சிறப்பாக உங்களுக்கு நாள் நகரும்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு வெற்றியான நாள் எடுத்த காரியத்தை ஜெயமாக முடிப்பீர்கள் ஏழாம் இடத்தில் இருக்கும் குரு ராசியை பார்ப்பதால் புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் பத்தாம் இடத்தில் சூரியன் சந்திரன் ஒன்றுகூடி இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தின் அடிப்படையில் பல விதமான யோகங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள் வாழ்த்துக்கள்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே சந்திராஷ்டமம் முடிந்து புத்துணர்வோடு செயல்படும் நாள் கேட்டது கிடைக்கும். மற்றவர்கள் உங்களை பாராட்டும்படியாக நிகழ்வுகள் நடைபெறும். எதிரிகள் இல்லாமல் போவார்கள். பகைவர்களை வென்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டு.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே என்னதான் உங்களுக்கு சந்திராஷ்டமம் சென்று கொண்டிருந்தாலும் எட்டாம் பாவத்து அதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் எதிர்காலம் குறித்தான பயம் இருந்தாலும் நாள் சிறப்பாக தான் அமையும் குறிப்பாக பகைவர்கள் உங்களை அழிக்க நினைத்தாலும் உங்களை வெல்ல முடியாது. புதிய பல அரிய காரியங்களை செய்வீர்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் மனம் தளர விடாதீர்கள் எதிர்காலம் சிறப்பாகும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுக்கு சிறப்பான நாள் ஏழில் சூரியன் சந்திரன் இணைந்து உங்களுக்கு அமாவாசை யோகத்தில் ராசியை பார்ப்பதால் உங்களை விட பெரிய அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். உங்களுடைய திறனறிந்து உங்களை பெருமையாக மற்றவர்கள் பேசுவார்கள். உங்களுக்கான நாள் இன்று.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் சந்திரன் ஒன்று கூடி அமாவாசை யோகத்தில் உங்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரப் போகிறார் அது மட்டும் இல்லாமல் மற்றவர்களால் நீங்கள் புகழப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பக்தியில் மனம் செல்லும்.