Rasipalan: கன்னிக்கு உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்; சிம்மத்துக்கு போட்டி: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today Rasipalan: மே மாதம் 9ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 09.05.2024
கிழமை: வியாழன்
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் பகல் 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். கால்நடைகளின் மீது ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சற்று கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
மிதுனம்
எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். வெளி வட்டாரப் பயணங்களில் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.
கடகம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
சிம்மம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் நம்பிக்கை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சி கைகூடும். மனதளவில் தெளிவு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
கன்னி
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடும், ஆர்வமும் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். கனிவு வேண்டிய நாள்.
துலாம்
மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
விருச்சிகம்:
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதர வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். முயற்சி நிறைந்த நாள்.
தனுசு
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
மகரம்
கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
கும்பம்
உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
மீனம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான அணுகுறைமுகளால் மனதில் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.