மேலும் அறிய

Rasipalan: சிம்மத்துக்கு சுகம்; கன்னிக்கு நட்பு; மகரத்துக்கு பொறுமை - முழு ராசிபலன்கள் இதோ

Today Rasipalan: மே மாதம் 17ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 17.05.2024 

கிழமை: வெள்ளி

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆர்வமின்மையான நாள். 

மிதுனம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவு உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

கடகம்

உடலில் இருந்துவந்த சோர்வு, களைப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் மௌனம் காக்கவும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

துலாம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். அமைதி பிறக்கும் நாள். 

விருச்சிகம்:

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான தொழில் சார்ந்த முதலீடுகள் குறித்த எண்ணம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் மறையும். சலனம் நிறைந்த நாள்.

தனுசு

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். இணையம் தொடர்பான துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி நட்புகளால் ஆதாயம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள்.

மகரம்

வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளால் திருப்தி உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆதரவு கிடைக்கும். பயம் விலகும் நாள். 

மீனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பகை மறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Embed widget