Rasipalan: துலாமுக்கு வரவு! மீனதுக்கு இன்பம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Rasipalan: ஜூன் மாதம் 16ஆம் நாள் ஞாயிறு அன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 16.06.2024
கிழமை: ஞாயிறு
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
இன்றைய (16-06-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே..மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். தடையாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தடைகள் விலகும் நாள்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே..நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே..பயிர் விளைச்சல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிரீதி நிறைந்த நாள்.
கடகம்
கடக ராசி அன்பர்களே..மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே..அரசு வழி முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். வருமானத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த மனஸ்தாபம் விலகும். வியாபாரத்தில் புதுமையான சூழல் அமையும். களிப்பு நிறைந்த நாள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே..எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். தனம் நிறைந்த நாள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே..குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில தகவல்கள் கிடைக்கும். வருங்கால தேவைகள் குறித்த எண்ணம் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே.வழக்கு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். வரவுகள் மூலம் கையிருப்பு அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். இணையம் சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தாமதம் மறையும் நாள்
தனுசு
தனுசு ராசி அன்பர்களே.விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். யூக விளையாட்டுகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் மதிப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். நட்பு நிறைந்த நாள்.
மகரம்
மகர ராசி அன்பர்களே,புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். தந்தையுடன் அனுசரித்துச் செல்லவும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபார பணிகளில் சற்று கவனம் வேண்டும். வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..எதிலும் அவசரமின்றி சிந்தித்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.
மீனம்
மீன ராசி அன்பர்களே..வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவிகள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.