மேலும் அறிய

Rasipalan: தனுசுக்கு சுகம், மகரத்துக்கு சுபம்- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Today Rasipalan: ஜூலை மாதம் 4ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 04.07.2024 

கிழமை: வியாழன்

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

இராகு:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நன்மை மேம்படும் நாள்.

ரிஷபம்

எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். மற்றவர்களின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். புதிய நபர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மனதளவில் இறுக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதலான பொறுப்புகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

மிதுனம்

ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. பிற இன மக்களின் நட்பு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். உயர்வு நிறைந்த நாள்.

கடகம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.

சிம்மம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கௌரவ பொறுப்புகளால் மதிப்பு உயரும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

கன்னி

உத்தியோகத்தில் முக்கியத்துவம் மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் முயற்சிகேற்ப லாபம் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

துலாம்

திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். கூட்டாளிகளிடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் பணிகளை முடிப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்:

எதிர்பாராத தன வரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் பலிதமாகும். முயற்சி மேம்படும் நாள்.

தனுசு

அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். மற்றவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தின் பாதுகாப்பை அறிந்து மேற்கொள்ளவும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

மகரம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

கும்பம்

பணி நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் புரிதலின்மை ஏற்படும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். நிதானமுடன் செயல்படுவது நன்மையை தரும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவு செய்வது பொருளாதார நெருக்கடியை தவிர்க்கும். விருத்தி நிறைந்த நாள்.

மீனம்

நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உற்சாகம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Embed widget