Rasi Palan Today, July 26: மிதுனத்துக்கு சாதனை, கடகத்துக்கு அமைதி: உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன?
Rasi Palan Today, July 26: ஜூலை மாதம் 26ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய பஞ்சாங்கம் நல்ல நேரம் | Today Nalla Neram Panchangam:
நாள்: 26.07.2024
கிழமை: வெள்ளி
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்
வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறரை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுப காரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். சோர்வு மறையும் நாள்.
ரிஷபம்
பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். செலவு நிறைந்த நாள்.
மிதுனம்
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.
கடகம்
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனை விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேம்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
சிம்மம்
எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோக ரீதியாக அலைச்சல்கள் ஏற்படும். அரசு வகையில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
கன்னி
நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் மறையும் நாள்.
தனுசு
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நலம் நிறைந்த நாள்.
மகரம்
நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். களிப்பு நிறைந்த நாள்.
கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு துறைகளில் சாதகமான சூழல் அமையும். சாதுரியமான செயல்பாடுகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தன விஷயங்களில் நிதானம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
மீனம்
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான வரவுகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை தரும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.