Today Rasipalan January 19: தனுசுக்கு சுகம்; கும்பத்துக்கு வெற்றி - இன்றைய நாளுக்கான ராசிபலன்!
Today Rasipalan: ஜனவரி 19ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 19.01.2024 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாகும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
ரிஷபம்
தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இன்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.
கடகம்
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
சிம்மம்
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
கன்னி
செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். நெடுந்தூர பயணங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடால் இருக்கவும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
துலாம்
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். புத்திரர்களின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
தனுசு
வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணம் மூலம் வரவு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
மகரம்
பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
கும்பம்
எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். இறை வழிபாட்டால் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.