மேலும் அறிய

Today Rasipalan January 12: மகரத்துக்கு மறதி! தனுசுக்கு பாசம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: ஜனவரி 12ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.01.2024 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதளவில் தெளிவு உண்டாகும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சிரமம் விலகும் நாள்.

மிதுனம்

வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. வரவைவிட செலவுகள் மேம்படும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.  உழைப்புக்குண்டான பலன் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானம் வேண்டிய நாள்.

சிம்மம்

மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை ஏற்படும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. மனதில் கற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

துலாம்

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். கோப உணர்ச்சிகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையை தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.  ஆக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பொது வாழ்வில் செல்வாக்கு மேம்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு

எதிர்பாராத பண வரவு உண்டாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழல்களை எதிர்கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.

மகரம்

மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நல்லது. வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மறதி குறையும் நாள்.

கும்பம்

திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். துணை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் தெளிவு ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமிர்த்தமான பயணம் உண்டாகும். இலாபம் நிறைந்த நாள்.

மீனம்

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். சுபகாரியங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள்…

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget