மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, August 6: மேஷத்துக்கு கவலை மறையும், ரிஷபத்துக்கு பொறுமை தேவை: உங்கள் ராசிக்கு என்ன பலன் ?
Rasi Palan Today, August 6: ஆகஸ்ட் மாதம் ஆறாம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 6, 2024
இன்றைய நாளில் பூர நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது இந்த நாள் என பார்ப்போம்.
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் பிரவேசிக்கிறார் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நான்காம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது வரவை குறிக்கும். இருப்பினும் தெம்போடு செயல்படுவீர்கள். கவலைகள் மறையும்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே இன்று தனவரவு பெருகக்கூடிய நாள். மற்றவர் இடத்தில் பணம் கேட்டால் உடனடியாக கிடைக்கும். யாரிடமும் மனம் விட்டு பேசுதல் சற்று ஏமாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொறுமை தேவை.
மிதுன ராசி
எவ்வளவு முயன்றாலும் முன்னேற முடியவில்லை என்று இயங்கும் மிதுன ராசி அன்பர்களே என்று நீங்கள் செய்யும் காரியங்கள் படு வேகமாக இருக்கும். சாமியோ சித புத்தி அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள். மற்றவர்கள் உங்களிடத்தில் கடன் கேட்டால். சற்று யோசித்து முடிவு எடுங்கள். கொடுத்தது திரும்ப வராமல் கூட போகலாம். திருப்பங்கள் நிறைந்த தினம்.
சிம்ம ராசி
ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனம் சுறுசுறுப்புடன் இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று உங்களுடைய நட்சத்திரத்திற்கு விசேஷ பூஜை செய்யலாம். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி அருமையாக பேசுவார்கள். ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவை.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே அதிகப்படியான அலைச்சல் இருக்கும் இவ்வளவு நாள் எங்கு போயிருந்தீர்கள் என்று மற்றவர்கள் உங்களை தேடும் அளவிற்கு வேலையில் மிகவும் பிசியாக இருப்பீர்கள். உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியின் நாள். எவ்வளவு பெரிய கடினமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடிக்க போகிறீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். எதற்காகவும் உங்களுடைய கோபத்தை யாரிடமும் காட்ட வேண்டாம். உதவிகள் கிடைக்கும் நாள்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திரன் பத்தாம் இடத்தில் சென்று கொண்டிருக்கிறார் ஏற்கனவே குரு ஏழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எதிலும் உற்சாகத்தோடு தான் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் நடைபெறலாம் செலவுகள் அதிகரிக்கும் சுப காரியங்கள் ஏற்படலாம்.
தனுசு ராசி
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் நாள். எவ்வளவு பெரிய நோய்களாக இருந்தாலும் அது மருத்துவத்தின் மூலம் உடனே குணமாகும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். உங்களுக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை சிறப்பாக முடிப்பீர்கள். நன்மை மிகுந்த நாள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பொன்னான நாள் இருப்பினும் எதிலும் பெரிதாக தலையிடாமல் அமைதியாக நாளை நகர்த்த பார்ப்பீர்கள். நண்பர்கள் உங்களைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டால் கூட ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைதி காக்கும் நாள். உதவிகள் தேடி வரும் ஆனால் சந்திராஷ்டமம் செல்வதால் இதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அமைதியான நாள்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே வரவு பத்து ரூபாய் இருந்தால் செலவு 30 ரூபாய் இருக்கும் கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்ற வார்த்தை கேட்ப புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பார்த்து வேர்க்கும் அளவிற்கு உங்களுடைய வேலை இருக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. யாரேனும் குதர்க்கமாக பேசினால் கூட தலையிட வேண்டாம்.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இருள் விலகி ஒளி பெருகும் நாள் மனதில் ஒரு படபடப்பு பயம் இருக்கலாம் மறைமுகமான எதிரிகளால் உங்களுக்கு மனதில் சஞ்சலம் உண்டாகலாம் கவலை வேண்டாம் கடவுள் இருப்பார் துணைக்கு. எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion