மேலும் அறிய

Today Rasi Palan: தனுசுக்கு தாமதம்; மகரத்துக்கு திருப்தி- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 16) பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 16ஆம் தேதி செவ்வாய் கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 16.04.2024 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

குளிகை:

பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பங்குதாரர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு விலகும் நாள்.

ரிஷபம்

மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் தேடல்கள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள். 

கடகம்

சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.  உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடம் நிறைந்த நாள்.

சிம்மம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த நாள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.

துலாம்

அனுபவப் பூர்வமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள்.

விருச்சிகம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.  வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாளுவது நல்லது. அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள். 

மகரம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மனதளவில் திருப்தி ஏற்படும். கவலை விலகும் நாள்.

கும்பம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

மீனம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ? ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை!  ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Allu Arjun Relese: காலையிலே அல்லு அர்ஜூன் விடுதலை! ஹாப்பியில் புஷ்பா ரசிகர்கள்!
Vice President: குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
குடியரசுத் துணை தலைவரை நீக்குவதற்கான நடைமுறை என்ன? சட்டம் சொல்வது என்ன?
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Breaking News LIVE: கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்! இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Theni: காட்டாற்று வெள்ளம் வந்தால் 10 நாளைக்கு சொந்த ஊருக்கு போக முடியாது: பழங்குடியின மக்கள் வேதனை
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Rasipalan December 14: சிம்மத்திற்கு ஆசை நிறைவேறும்; கன்னிக்கு வெற்றிதான்- உங்க ராசி பலன்?
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Embed widget