Today Rasipalan October 06: கும்பத்துக்கு பக்தி...மீனத்துக்கு கவலை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan October 06: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
![Today Rasipalan October 06: கும்பத்துக்கு பக்தி...மீனத்துக்கு கவலை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ! Rasi palan today tamil 2023 6th october daily horoscope predictions 12 zodiac signs astrology nalla neram panchangam Today Rasipalan October 06: கும்பத்துக்கு பக்தி...மீனத்துக்கு கவலை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/2d6c82b43bdeea84aa7e95e79d119e3a1696521142938729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாள் - 06.10.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
நண்பகல் 12.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பின்மை உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்ப நபர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்பும், மேன்மையும் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். தடைகள் விலகும் நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிர்வாகத் துறையில் புதிய அறிமுகம் ஏற்படும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
விருச்சிகம்
பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் அமையும். எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நண்பர்களின் மத்தியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் தன்னம்பிக்கை துளிர்விடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நினைத்த பணிகள் கைகூடும். உதவி கிடைக்கும் நாள்.
கும்பம்
புதிய திட்டங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் கல்வி சார்ந்த தெளிவு ஏற்படும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பக்தி நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் அமையும். உழைப்புக்கான மரியாதை கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கவலை குறையும் நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)