Today Rasipalan, October 22: இன்னைக்கு சண்டே.. உங்களுக்கு ஜாலியா? 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan October 22: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 22.10.2023 - ஞாயிற்று கிழமை
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடனிருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
மிதுனம்
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவுபெறும். சிக்கனம் வேண்டிய நாள்.
கடகம்
உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகை மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உழைப்பு நிறைந்த நாள்.
கன்னி
எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழல் குறையும். சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
துலாம்
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பகைமை உணர்வுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் கைகூடிவரும். வாகனப் பகுதிகளைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் கைகூடும். முயற்சி நிறைந்த நாள்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
மகரம்
தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் உண்டாகும். அருகில் உள்ளவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கும்பம்
புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் அமையும். எதிலும் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். சில முக்கியமான வேலைகள் முடிவுபெறும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
மீனம்
சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.