Today Rasipalan, October 20: மேஷத்துக்கு வெற்றி...ரிஷபத்துக்கு நிதானம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan October 20: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 20.10.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை வந்து சேரும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிலும் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்களில் அனுபவத்தைப் பயன்படுத்துவது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம்
எண்ணங்களைச் செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாழ்வு நிறைந்த நாள்.
கடகம்
வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளால் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் செயல்திறன் மேம்படும். விவசாயம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
சிம்மம்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கற்பனை துறைகளில் மதிப்பு மேம்படும். நாடாளும் நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். திருப்தியற்ற மனநிலை குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனை மேம்படும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுகவீனம் நிறைந்த நாள்.
துலாம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் செயல்களில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். திட்டமிட்ட பணிகள் கைகூடும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். சில விஷயங்களுக்கு அனுபவ ரீதியான முடிவு நன்மையைத் தரும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் விவாதங்களைக் குறைப்பது நல்லது. எதிலும் திட்டமிட்டுச் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
மகரம்
நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். பணவரவுகளால் திருப்தி உண்டாகும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் அமையும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
எதிர்கால வாழ்விற்கான சேமிப்பு உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். பங்குதாரர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நிர்வாகத் திறமை மேம்படும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.