Today Rasipalan October 01: மிதுனத்துக்கு வெற்றி..துலாமுக்கு முயற்சி..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan October 01: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 01.10.2023 - ஞாயிற்று கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
நினைத்த சில பணிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தற்பெருமை பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மிதுனம்
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய செயல்களில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கை கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உறவுகளின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ஆலோசனை கிடைக்கும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கேற்ப சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.
கன்னி
மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. சிக்கலான சில சூழ்நிலைகளைச் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் கனிவு வேண்டும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். நேர்மை வேண்டிய நாள்.
துலாம்
சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவுகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். முயற்சிகள் மேம்படும் நாள்.
விருச்சிகம்
இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சார்ந்த புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.
தனுசு
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.
மகரம்
அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகப் பணிகளில் சில சிக்கல்கள் குறையும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். துணிவு நிறைந்த நாள்.
கும்பம்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். குழப்பம் குறையும் நாள்.
மீனம்
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு உண்டாகும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.