Rasipalan: விருச்சிகத்துக்கு சுகம்... கன்னிக்கு களிப்பு... உங்கள் ராசிக்கான என்ன பலன் இன்று?
RasiPalan Today March 19: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 19.03.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவினை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வரவுகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
மருத்துவ துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவலைகள் குறையும் நாள்.
மிதுனம்
வித்தியாசமான சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நிர்வாக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடகம்
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
சிம்மம்
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஈடேறும். தடைகள் குறையும் நாள்.
கன்னி
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். களிப்புகள் நிறைந்த நாள்.
துலாம்
பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தாமதம் விலகும் நாள்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு
எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகரம்
மனதில் குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். அடமானத்தில் உள்ள பொருட்களை பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.
கும்பம்
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பிடிவாத குணத்தை குறைத்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் விவேகத்துடன் இருக்கவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.