RasiPalan Today 19th August:மிதுனத்துக்கு செல்வாக்கு; மீனத்துக்கு நிறைவு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today 19th August: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 19.08.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 01.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்
தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
ரிஷபம்
ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கவலை விலகும் நாள்.
மிதுனம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.
கடகம்
தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தந்தை வழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.
சிம்மம்
மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். பலவிதமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுதி நிறைந்த நாள்.
துலாம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான மரியாதை கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதளவில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.
மகரம்
எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பம் உண்டாகும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.
கும்பம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் தாமதமான சூழல் ஏற்படும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
மீனம்
எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் தோன்றி மறையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.