மேலும் அறிய

Rasi Palan Today August 19: மிதுனத்துக்கு சுகம்... கடகத்துக்கு செல்வாக்கு! இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan Today August 19: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 19.08.2022

நல்ல நேரம் :

மதியம் 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

மாலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

சூலம் –மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். மாற்றம் நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

மனதில் புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கவலை குறையும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை விரைந்து முடிப்பீர்கள். புதிய இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவி காலதாமதமாக கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

தேவையற்ற சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி அறிந்து கொள்வதற்கான சூழல் அமையும். தாமதம் குறையும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவங்களும், சூழ்நிலைகளும் ஏற்படும். சுபிட்சம் நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்து கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, 

வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தொழில் சார்ந்த உதவியும், லாபமும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். நலம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget