Rasipalan: விருச்சிகத்துக்கு விரயம்... தனுசுக்கு மாற்றம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 18: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 18.04.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிர்பார்த்த சில பணிகள் நிறைவுபெறும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் நிமிர்த்தமான முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மிதுனம்
மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
குடும்பத்தில் அமைதி உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சுபகாரியம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் தெளிவு பிறக்கும். அசதிகள் குறையும் நாள்.
சிம்மம்
சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வேகத்தை விட விவேகம் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். எளிமையான பணிகள் கூட தாமதமாக நிறைவுபெறும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுபகாரியம் நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
துலாம்
கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெரியோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிகம்
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மின்சாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
மகரம்
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் உள்ள இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பு உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
மீனம்
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடலில் ஏற்பட்ட சோர்வின் மூலம் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நிதானம் வேண்டிய நாள்.