RasiPalan Today 16th August: எந்த ராசிக்காரர்களுக்கு இன்று இனிய நாள்?.. உங்க ராசிபலனை தெரிஞ்சுக்கோங்க..!
RasiPalan Today 16th August: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today August 16:
நாள்: 16-08-2023 - புதன்கிழமை
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் மதியம் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகன முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். மதிப்பு மேம்படும் நாள்.
கடகம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். களிப்பு நிறைந்த நாள்.
கன்னி
கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.
துலாம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பணி நிமிர்த்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவத்தால் பக்குவம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தடைபட்ட பணிகள் முடியும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள்.
தனுசு
மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
மகரம்
சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உறவுகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அன்பு நிறைந்த நாள்.
கும்பம்
பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பின் மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். தெளிவு நிறைந்த நாள்.
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.