Today Rasipalan September 15: மிதுனத்துக்கு மகிழ்ச்சி.. கும்பத்துக்கு தடை.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
RasiPalan Today September 15: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 15.09.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.பழைய சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். மனதளவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். மொத்தத்தில் குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் நாள்.
ரிஷபம்
மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு மேம்படும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் முடிவுகளை எடுப்பதில் அதிக கவனம் வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைய வாய்ப்புள்ளது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தடைகள் விலகும் நாளாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
மிதுனம்
உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாலும் அக்கறை தேவை. தேவையைக் காட்டிலும் பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொறுமையைக் கடைபிடிப்பதால் மேன்மை ஏற்படும். தொழிலில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயணங்களில் அனுபவம் ஏற்படும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். ஆக, மிதுன ராசிக்காரகளுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும்.
கடகம்
இந்த ராசிக்காரகளுக்கு இன்றைய நாளில் மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும் என்பதால் வீண் குழப்பங்கள் வேண்டாம். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புதிய மின்னணு பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் கவலை வேண்டாம். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தன்னம்பிக்கை நிறைந்த நாள் என்பதால் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாளில் வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான ஆடை, ஆபரண வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படுவதோடு கலைகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் பேச்சுத் திறமைகளின் மூலம் அதற்கான ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவலைகள் குறையும் நாள் என்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்.
கன்னி
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையலாம் என்றாலும் கவலை வேண்டாம். வியாபார பணிகளில் இன்றைய நிலைமை சுமாராக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த தெளிவு உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
துலாம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலாம் ராசிக்காரர்களே, இன்றைய தினம் பணி நிமிர்த்தமான அயல்நாட்டு வாய்ப்புகள் சாதகமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். சகோதரர் வகையில் உள்ளவர்களுடான ஒத்துழைப்பு மேம்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் சென்றால் வீண் சண்டைகளை தவிர்க்கலாம். உதவி நிறைந்த நாள்.
விருச்சிகம்
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் என்பதால் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். உங்கள் சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும் என்பதால் குழப்பம் வேண்டாம். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
தனுசு
மனதளவில் இதுவரை நிலவி வந்த சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பங்களை நிறைவேற்றி அவரின் அன்பை பெறுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு உயர்ந்து நிற்பீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் சென்றால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் சரியாகும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த சுபகாரிய பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளைச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
கும்பம்
இன்றைய நாளின் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும் என்பதால் கவலை வேண்டாம். முக்கியமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்பட்டு இல்லற வாழ்வு சிறக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அன்பான பெற்றோராக திகழ்வீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நட்புகளால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சுதந்திரம் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.