Rasipalan: மகரத்துக்கு பக்தி... ரிஷபத்துக்கு வெற்றி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
RasiPalan Today May 15: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 15.05.2023 - திங்கள்கிழமை
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளும் அதை சார்ந்த அலைச்சல்களும் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கற்கும் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்பாடுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அதிர்ஷ்டகரமான நாள்.
கடகம்
உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆதாயம் உண்டாகும் நாள்.
சிம்மம்
மறைமுகமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் கருத்துகளை தவிர்ப்பது நல்லது. நிர்வாகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். தொழில்நுட்ப பயிற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செய்கின்ற செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாகன பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள்.
விருச்சிகம்
பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்கு கருத்துகள் கூறுவதை குறைத்து கொள்வது நல்லது. மனதில் வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். சுகம் நிறைந்த நாள்.
மகரம்
செய்கின்ற செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தன, தான்ய விருத்தி உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
கும்பம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
மீனம்
சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.