Rasipalan Today, June 15 : சிம்மத்துக்கு சாதனை... தனுசுக்கு மன உறுதி... உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasipalan Today, June 15 : இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 15.06.2022
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
நண்பகல் 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை
இராகு :
காலை 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை
எமகண்டம் :
மாலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களில் காலதாமதமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் போது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. பொறுமையுடன் இருந்தால் நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். வியாபாரிகளுக்கு ஏமாற்றமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாந்தமான மனநிலை இருக்கும். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை தேவை.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,பரஸ்பர நம்பிக்கையின் உதவியுடன் குடும்ப உறவுகள் பலப்படும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் காண்பீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு உண்டாகும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்கள் கௌரவத்தை உயர்த்துவார். வியாபாரிகள் இன்று அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கம் உங்களை குழப்பம் அடையச் செய்யலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் நாளாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இன்று பிறருக்குக் கொடுத்த பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,உங்களுடைய சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெரியவர்கள் கூறும் ஆலோசனைகள் இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, புதிதாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மனதில் தோன்றும். எந்தவொரு நபரையும் கண்மூடித்தனமாக நம்புவது சில சங்கடத்தையும், மன அழுத்தத்தைக் கொடுக்கும். சில குடும்பப் பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உங்களின் செயலால் சமுதாயத்தில் மதிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியே தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய நகைகளை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, புதிய வேலைகளைத் தொடங்க மன உறுதி ஏற்படும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க ஒருவரின் உதவியைப் பெறலாம். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பின் அருமை புரியும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை தேவை. சிறு விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய உங்கள் சிந்தனை மாறலாம்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் கிடைக்கக்கூடிய அனுகூலமான பலன்கள் உண்டு.தடைப்பட்ட திட்டத்தை, செயலை மீண்டும் தொடங்க சரியான நாள். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மகிழ்வீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து சில சாதக மற்ற செய்திகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது நல்லது.
மீனம்:
மீன ராசி நேயர்களே,கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். நிலம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்