Rasipalan September 12: விருச்சிகத்துக்கு செல்வாக்கு.. கும்பத்துக்கு உயர்வு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
RasiPalan Today September 12: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 12.09.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
கடகம்
பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.
சிம்மம்
உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் கைகூடும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.
கன்னி
வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வர்த்தகம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
துலாம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
விருச்சிகம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். புதிய அனுபவம் கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
தனுசு
வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசுப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயணம் சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
மகரம்
உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
கும்பம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகனத்தில் உள்ள பழுதுகளைச் சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். வாசனைத் திரவியங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.