Rasipalan October 10: துலாம் செல்வாக்கு... மகரம் அனுகூலம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் உள்ளே!
RasiPalan Today October 10: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 10.10.2022
நல்ல நேரம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மதியம் 7.30 மணி முதல் மதியம் 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் தொடர்பான வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பயணம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
கடகம்
பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டு வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
சிம்மம்
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் மூலம் பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.
கன்னி
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
துலாம்
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெருக்கமானவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.
விருச்சிகம்
குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
தனுசு
நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மகரம்
நவீன மின்னணு சாதனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
கும்பம்
வியாபார பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.