Rasi Palan Today, Feb 19 : துலாம் ராசிக்கு ஏற்றம், கும்பத்திற்கு ஏமாற்றம்.. இன்றைக்கு உங்களின் ராசிக்கான பலன் என்ன?
Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 19 பிப்ரவரி 2022 : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இந்த நாள் எப்படி அமையப்போகிறது என்பதை கீழே காணலாம்.
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை
இராகு :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை
சூலம் : கிழக்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு இன்பமான நாளாக அமையும். நீண்ட நாள் நீடித்து வந்த பிரச்சினை ஒன்றிற்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன நிறைவாக இருக்கும். பிடித்தவர்கள், நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உங்களால் மிகப்பெரிய நன்மை பயக்க உள்ளது. பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே பாசம் அதிகரிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பணவரவும், தன வரவும் இந்த நாள் அமோகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் கிட்டும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்கள் மனதில் தேவையில்லாத பயம் உண்டாகும், மனதில் அச்ச உணர்வு ஏற்படாமல் இருக்க சிவபெருமானை வழிபட வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் மிகவும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். ஆலய வழிபாடு அமைதியை தரும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் தேவையில்லாத விவகாரங்களை சந்திக்க நேரிடும். இதனால், வீண் கோபம் மனதில் உண்டாகும். பணியிடங்கள், பொது இடங்களில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. குடும்பங்களில் நேரும் பிரச்சினைகளுக்கு பொறுமையாக சிந்தித்து தீர்வு காண வேண்டும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சவாலான நாளாக அமையும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய போட்டிகள் உருவாகலாம். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இந்த நாளே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் வாங்க வாய்ப்புகள் அதிகம். தொலைபேசி வழித்தகவல்களால் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வீண் செலவு ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு அவசியம். ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கடன் தொகை இன்று வசூலாகும். வீடுகளில் மங்கலச் செய்தி ஒலிக்கும். பெரியவர்கள் அறிவுரைகள் வாழ்க்கைக்கு சிறப்பை ஏற்படுத்தும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை பயக்கும் நாளாக அமையும். வரன்கள் வாயில்தேடி வரும். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். காதலர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலாம்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஏமாற்றமான நாளாக அமையும். தொழில் மற்றும் பணியிடங்களில் எதிர்பார்த்து காத்திருந்த மாற்றம் கிடைக்காமல் போகலாம். மனம் தளரக்கூடாது. அடுத்தவரை இடையூறு செய்வதாக தேவையில்லாத எண்ணம் ஏற்படலாம்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிள்ளைகள் வழி ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மிகப்பெரிய உதவி செய்வார்கள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்